கணவரிடம் மாத செலவுக்கு 6,16,000 ரூபாய் கேட்ட மனைவி.. உயர்நீதிமன்றம் கொடுத்த மறக்க முடியாத தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண், தனது கணவரிடம் மாதம் மாதம் பராமரிப்பு தொகை 6,16,000 ரூபாய் தர உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். அந்த மனுவில், முழங்கால் வலி, பிசியோதெரபிக்கு மாதம் 4-5 லட்சம் ரூபாயும், ஷூ மற்றும் ஆடைகள் வாங்க மாதம் 15000 ரூபாயும், வீட்டிற்குள் உணவுக்காக மாதம் 60000 ரூபாயும், வீட்டிற்கு வெளியே சாப்பிட இன்னும் சில ஆயிரங்கள் கேட்டார். அதற்கு நீதிபதி கொடுத்த பதிலை பாருங்கள்.

விவகாரத்து கேட்டு வழக்கு தொடரும் பெண்கள், கணவரிடம் ஜீவனாம்சம் கேட்பது வழக்கம். அந்த ஜீவனாம்சம் தொகையில் தான் பல பெண்கள் குழந்தைகளை பராமரிக்கவும், அவர்களின் கல்வி, உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தியும் செய்கிறார்கள். அதுமட்டுமின்றி பல கோடிகளில் சொத்து வைத்துள்ள கணவரிடம் இருந்து தங்களது குழந்தைகளின் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்ய கணிசமான தொகையை மாதம் மாதம் விவகாரத்தான பெண்கள் பெறுகிறார்கள்.

karnakta high court divorce

நீதிமன்றம் இந்த ஜீவனாம்சம் விவாகரத்தில் தலையிட்டு நியாயமான உத்தரவுகளை பிறப்பிக்கிறது. கேட்கும் தொகையை அப்படியே நீதிமன்றங்கள் ஒதுக்க உத்தரவிடுவது இல்லை.. ஓரளவு நியாயமான தொகையை பராமரிப்புக்கான ஒதுக்க உத்தரவிடுகின்றன. அப்படித்தான் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் பெண் ஒருவர், கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் அவர் கணவரிடம் மாதாந்திர பராமரிப்புக்காக 6,16,000 ரூபாய் தர உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். அந்த மனுவில், தனக்கு உள்ள முழங்கால் வலி மற்றும் அதற்கு பிசியோதெரபி செய்வதற்காக மாதம் 4-5 லட்சம் ரூபாயும், ஷூ மற்றும் ஆடைகள் வாங்க மாதம் 15000 ரூபாயும், வீட்டிற்குள் உணவுக்காக மாதம் 60000 ரூபாயும், வீட்டிற்கு வெளியே சாப்பிட இன்னும் சில ஆயிரங்கள் வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த மனுவை படித்து பார்த்து ஆடிப்போன கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி, என்ன இது என்று கேட்டதுடன், இந்த மனு சகிப்புத்தன்மைக்கு அப்பாற்பட்டது என்று கடிந்து கொண்டார். அதற்கு அந்த பெண்ணின் வழக்கறிஞர், எனது மனுதாரர் தற்போது வாழ்ந்து வரும் வாழ்க்கையை அப்படியே தொடருவதற்காக இந்த நியாயமான தொகையை கணவரிடம் இருந்து எதிர்பார்க்கிறார் என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, கணவரிடம் இருந்து மனைவி கேட்கும் தொகையை அப்படியே கொடுத்துவிட உத்தரவிட முடியாது. கணவர் எவ்வளவு ஊதியம் பெறுகிறார் அல்லது எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதுடன் அடிப்படை தேவைகளை பொறுத்தே உத்தரவிட முடியும்.

கணவர் 10 கோடி சம்பாதிக்கிறார் என்றால், மனைவிக்கு மாதம் 5 கோடி தர வேண்டும் என்றெல்லாம் உத்தரவிட முடியாது.. உங்களின் அடிப்படை தேவைகளுக்கான பணம் எவ்வளவு, இவ்வளவு பணம் கேட்பதற்கான காரணம் என்ன என்பதை கூற வேண்டும்.. இல்லாவிட்டால் மனு உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்படும்..ஒரு மாத செலவுக்கு 6,16,000 ரூபாய் என்பது எல்லாம் மிக அதிகம்..

இவ்வளவு பணத்தை ஒருவர் செலவு செய்வாரா? தனியாக இருக்கும் பெண் இவ்வளவு பணத்தை செலவு செய்வாரா? அவருக்கு பணம் வேண்டும் என்றால், சம்பாதிக்க சொல்லுங்கள். கணவரிடம் இருந்து இதனை எதிர்பார்க்க வேண்டாம். உங்களின் அடிப்படை தேவைக்கு மட்டும் என்ன பணம் வேண்டுமோ அதனை கேளுங்கள்.. அப்படி இல்லாவிட்டால் உங்கள் மனு நிச்சயம் நிராகரிக்கப்படும்.. பெண்ணுடன் சண்டை போட்டு பிரிந்ததற்காக இவ்வளவு பணத்தை தர வேண்டும் என்று கணவருக்கு தண்டனை தர முடியாது என்று நீதிபதி திட்டவட்டமாக கூறினார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+