3வது கர்ப்பம்.. விஜயலட்சுமியின் வயிற்றை கத்தியால் அறுத்து.. கருவை கலைத்த கணவன்.. பயங்கரம்..!
மனைவியின் கர்ப்பத்தை கத்தியாலேயே கலைத்த கணவன் தலைமறைவாகி உள்ளார்
பெங்களூர்: "3வதும் பெண் குழந்தையா?" என்று டென்ஷன் ஆகி உள்ளார் அரவிந்த்.. இதையடுத்துதான் அந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது..!
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த்.. இவரது மனைவி விஜயலட்சுமி.. அரவிந்த் ஒரு கூலி தொழிலாளி.. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், விஜயலட்சுமி மறுபடியும் கர்ப்பம் அடைந்தார்... ஆனால், ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்ததால், இந்த முறையாவது தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று நினைத்து கொண்டே இருந்தார் அரவிந்த்.

பெண் குழந்தை
தன் சொந்தக்காரர்களிடம், பிறக்க போவது ஆண் குழந்தைதான் என்று சொல்லி கொண்டே இருந்தார்.. பிறகு, மனைவியின் வயிற்றில் என்ன குழந்தை வளர்கிறது என்ற ஆர்வம் அதிகமாக ஏற்பட்டு கொண்டே இருந்தது.. அதனால், அவரை ஸ்கேன் சென்டருக்கு அரவிந்த் அழைத்து சென்றார்.. அப்போதுதான், விஜயலட்சுமியின் வயிற்றில் வளருவது 3வதும் பெண் குழந்தை என்று தெரியவந்தது..

கர்ப்பம்
இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அரவிந்த், அந்த குழந்தையை அபார்ஷன் செய்துவிடும்படி கட்டாயப்படுத்தி உள்ளார்... ஆனால், விஜயலட்சுமி அதற்கு மறுத்துள்ளார்.. இது தொடர்பாக தினமும் இவர்களுக்குள் பிரச்சனை இருந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று, விஜயலட்சுமி வீட்டில் தனியாக இருந்தார்.... அப்போது 2 பேரை அழைத்து கொண்டு அரவிந்த் வீட்டிற்குள் நுழைந்தார்..

3 பேர்
பிறகுதான் தெரிந்தது, அவர்கள் விஜயலட்சுமிக்கு அபார்ஷன் செய்ய வந்தவர்களாம். அரவிந்தும், உட்பட 3 பேரும் சேர்ந்து விஜயலட்சுமிக்கு வலுக்கட்டாயமாக அபார்ஷன் செய்ய முயன்றனர்.. இவர்களிடம் தன்னையும் வயிற்றில் உள்ள பிஞ்சுவையும் காப்பாற்றி கொள்ள விஜயலட்சுமி போராடினார்.. கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்... ஆனாலும், கத்தி எடுத்து விஜயலட்சுமியின் வயிற்றை கத்தியால் அறுத்துவிட்டனர்.. 3 பேரும் சேர்ந்து கருவையும் கலைத்து விட்டனர்..

அலறல்
இதனால் விஜயலட்சுமிக்கு ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளது.. ரத்தம் அதிகமாக வெளியேறியதை பார்த்து 3 பேருமே பயந்துவிட்டனர்.. இதனால், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.. வலி பொறுக்க முடியாமல் விஜயலட்சுமி அலறவும், அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து விஜயலட்சுமியை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. இபபோது விஜயலட்சுமிக்கு சிகிச்சை நடந்து வருகிறது.. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த விஜயாப்புரா புறநகர் போலீசார், தப்பி ஓடிய அரவிந்த உட்பட 3 பேரையும் தேடி வருகிறார்கள்...

ஸ்கேன் சென்ட்டர்
இந்த சம்பவத்தில் அரவிந்த் உட்பட 3 பேருமே முதல் குற்றவாளி என்றாலும் வயிற்றில் இருப்பது என்ன குழந்தை என்று சொல்வது சட்டப்படி குற்றமாகும்... ஆனால் விஜயலட்சுமிக்கு ஸ்கேன் எடுத்தபோது என்ன குழந்தை என்று யார் சொன்னது? ஏன்? என்ற விசாரணையும் அந்த ஸ்கேன் சென்டரில் நடந்து வருகிறது.. வழக்கமாக பெண் குழந்தைகள் பிறந்தவுடன்தான் கள்ளிப்பாலை ஊற்றி கொல்வர்.. இப்போது பிறக்கும் முன்பேயே வயிற்றை கிழித்து கொல்வது நம்மை நிலைகுலைய வைத்து வருகிறது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications