பா.ஜ.க மேலிடம் கூறினால்.. எந்த நேரமும் பதவி விலகத் தயார்.. மனம் திறந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா!
பெங்களூரு: பாஜக மேலிடம் கூறினால் பதவி விலகத் தயார் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மிக மோசமான மாநிலங்களில் ஒன்று கர்நாடகா.
கொரோனா தடுப்பு பணிகளில் சரியாக கவனம் செலுத்துவதில்லை என்று எடியூரப்பா மீது தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.

பதவி விலகணும்
இதனால் எடியூரப்பா பதவி விலக வேண்டும் என்று பாஜகவினரே வலியுறுத்தி வருவதாக தகவல்கள் பரவி வந்தன. மாநில பாஜக தலைவர்கள் சிலர் மறைமுகமாக கருத்து தெரிவித்தனர். பாஜக மேலிடமும் இதே சிந்தனையில் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து முதன்முறையாக மவுனம் கலைத்துள்ளார் எடியூரப்பா.

மேலிடம் விரும்பினால் ராஜினாமா
இது தொடர்பாக அவர் கூறியதாவது:- டெல்லி மேலிடம் என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நாள் வரை முதல்வராக தொடருவேன். நான் வெளியேற வேண்டும் என்று அவர்கள் சொல்லும் நாள் ராஜினாமா செய்வேன், மேலும் மாநில நலனுக்காக உழைப்பதில் என்னை முழுமையாக ஈடுபடுத்துவேன். எனது நிலைப்பாடு தெளிவாக உள்ளது. அவர்கள் எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளனர்.

அமைதியாக இருப்பேன்
எனது திறமைகளில் அதைப் பயன்படுத்த முயற்சிக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தலைமையிடமே விட்டு விடுகிறேன். நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் எப்போதும் ஒரு மாற்று இருக்கும். கர்நாடகாவில் மாற்று வழிகள் இல்லை என்று நான் நம்பவில்லை. எனக்கு எதிரான பொதுத் தாக்குதல்கள் குறித்து எந்த கருத்தும் கூறாமல் அமைதியாக இருப்பேன். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மகன் சந்திப்பு
எடியூரப்பாவின் மகனும் மாநில பாஜக துணைத்தலைவருமான விஜேந்திரா நேற்று கட்சியின் தேசியத்தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்துப் பேசி இருந்தார். இந்த நிலையில் எடியூரப்பாவிடம் இருந்து இப்படி ஒரு கருத்து வெளிவந்துள்ளது. எடியூரப்பாவை இப்போதைக்கு மற்றும் திட்டம் இல்லை என்று விஜேந்திராவிடம், ஜேபி நட்டா கூறியதாக கூறப்படுகிறது.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications