பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாலை 6 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறேன்.. குமாரசாமி கட்டாயம் வரனும்.. எடியூரப்பா அடேங்கப்பா

Google Oneindia Tamil News

Recommended Video

    Karnataka : கர்நாடகாவில் திருப்பம்.. அமித்ஷாவுடன் பாஜக குழு சந்திப்பு- வீடியோ

    பெங்களூர்: இன்று மாலை 6 மணிக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்ய உள்ளேன் என்று பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.

    இன்று காலை 10.30 மணி அளவில் ராஜ்பவனில் ஆளுநர் வஜுபாய் வாலாவை, சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பாஜக தலைவர் எடியூரப்பா. இதையடுத்து ஆளுநரும், எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.

    Will take oath as CM at 6 PM, says BS Yeddyurappa

    இதன் பிறகு ராஜ் பவன் அருகே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடியூரப்பா கூறியதாவது: இன்று மாலை 6 மணி முதல் 6.15 மணிக்குள், முதல்வராக பதவி பிரமாணம் செய்ய உள்ளேன். அமைச்சரவையில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பது தொடர்பாக கட்சியின் தேசியத் தலைவருடன் ஆலோசித்து விட்டு பிறகு தெரிவிக்கிறேன்.

    எனது பதவி ஏற்பு விழாவுக்கு, முன்னாள் முதல்வர் குமாரசாமி, சட்டசபை காங்கிரஸ் குழுத் தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

    இது தொடர்பாக அவர்களுக்கு நான் கடிதம் எழுத உள்ளேன். தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுக்க உள்ளேன். இவ்வாறு தனது பேட்டியில், தெரிவித்தார் எடியூரப்பா.

    English summary
    Will take oath as CM at 6 PM, says BS Yeddyurappa after met Governor.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X