"கன்னட மக்களே என் கம்பெனியில் முதலீடு பண்ணுங்க" டிரம்ப் வீடியோவை வைத்து கர்நாடகாவில் ரூ.1 கோடி மோசடி
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் ஒரு மிகப் பெரிய மோசடி நடந்துள்ளது. இதில் பலரும் தங்கள் பணத்தை இழந்துள்ள நிலையில், அவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். டொனால்ட் டிரம்பின் பெயரைப் பயன்படுத்தி இந்த மோசடி அரங்கேறியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த காலத்தில் அறிவியல் பல மடங்கு வளர்ந்துவிட்டது. அதற்கேற்ப மோசடி பேர்வழிகளும் கூட தங்களை அப்டேட் செய்து வருகிறார்கள். இப்படி கூட மோசடி நடக்குமா என நாம் யோசிக்காத வழிகளிலும் இப்போது மக்கலை ஏமாற்றி வருகிறார்கள். குறிப்பாக சைபர் மோசடிகள் பல மடங்கு அதிகரித்துவிட்டன.

சைபர் மோசடிகளில் நேரில் பார்க்கத் தேவையில்லை. ஒரே நாளில் அடுத்தடுத்து பலரிடம் பேச முடியும் என்பது போன்ற காரணங்களால் மோசடிகள் அதிகரித்து வருகிறது. இப்போது அப்படி தான் டிரம்ப் பெயரைச் சொல்லி நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் மிக பெரிய மோசடி அரங்கேறியுள்ளதாக டெக்கன் குரோனிக்கல் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரம்ப் பெயரில் மோசடி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயரைப் பயன்படுத்தி கர்நாடகாவில் மோசடி நடந்துள்ளது. இப்படி சைபர் குற்றவாளிகள் 150க்கும் மேற்பட்டோரிடம் இருந்து ரூ.1 கோடிக்கு அதிகமான தொகையை ஏமாற்றியுள்ளனர். பணத்தை இழந்த பொதுமக்கள் இப்போது தங்கள் பணத்தை மீட்டெடு தருமாறு போலீசார் நிலையத்தை அணுகியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் பெயரை வைத்து நம்ம ஊரில் மோசடியா.. அப்போது எதுவும் அறியாத ரூரல் மக்கள் தான் ஏமாந்து இருப்பார்கள் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அப்படி இல்லை. கர்நாடக தலைநகர், பெங்களூர், தமகுரு, மங்களூரு மற்றும் ஹாவேரி எனப் படித்த மக்கள் உள்ள பகுதிகளிலும் கூட மோசடிகள் நடந்துள்ளன. டிரம்ப் பெயரைச் சொன்னால் காசு தருவார்களா என நீங்கள் கேட்கலாம்.. அவர்கள் ஏமாற ஒரு காரணம் இருந்திருக்கிறது.
ஏஐ இமேஜால் ஏமாந்த மக்கள்
அதாவது டிரம்ப் பேசுவது போன்ற ஒரு ஏஐ இமேஜ்ஜை உருவாக்கி அதை அனுப்பியே ஏமாற்றியுள்ளனர். டிரம்ப் ஹோட்டலில் முதலீடு செய்ய அவரே அழைப்பு விடுக்குமாறு அந்த வீடியோ இருக்கிறது. ஏற்கனவே நமது நாட்டில் மும்பை மற்றும் டெல்லியில் டிரம்ப் டவர் இருப்பதால் அதுபோன்ற ஒரு முயற்சி என்றே மக்கள் ஏமாந்துள்ளனர். குறுகிய காலத்தில் முதலீட்டை இரண்டு மடங்காகத் திருப்பி எடுக்கலாம் என டிரம்பே சொல்வது போல அந்த வீடியோ இருந்ததால் பலரும் முதலீடு செய்துள்ளனர்.
சைபர் கிரைம் போலீசார்
இது தொடர்பாக ஹாவேரி சைபர் கிரைம் ஆய்வாளர் சிவசங்கர் கூறுகையில், "ஈஸியாக பணத்தைச் சம்பாதிக்கலாம் என்றே அவர்களை ஏமாற்றியுள்ளனர். மேலும், ஒர்க் ஃபர்ம் ஹோம் முறையில் வேலை வாய்ப்பு வழங்கவுள்ளதாகக் கூறியுள்ளனர். இதன் காரணமாகவே பலரும் பணத்தைக் கொடுத்துள்ளனர். ஹாவேரியில் மட்டும் இதுபோல 15 பேர் ஏமாந்துள்ளனர்" என்றார்.
டிரம்ப் ஹோட்டல்
இதற்காக 'டிரம்ப் ஹோட்டல் ரென்டல்'என்ற பெயரில் செயலி ஒன்றையும் மோசடி பேர்வழிகள் வெளியிட்டுள்ளனர். இதை எல்லாம் வைத்துப் பார்த்தே அதை உண்மை என்று அவர்கள் நம்பியுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், "முதலில் கணக்கை ஓபன் செய்ய ரூ.1,500ஐ செலுத்தச் சொன்னார்கள். பிறகு எங்களைப் பற்றி விரிவாக எழுதித் தரச் சொன்னார்கள். எல்லாவற்றையும் நாங்கள் செய்தோம். பிறகு சிறுக சிறக தொகையை வாங்கிக் கொண்டே போனார்கள். அப்படியே ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் பிடுங்கிவிட்டனர். இப்போது நாங்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை" என்றார.
-
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications