பெங்களூரில் 400-க்கு ஐஸ்கிரீம் வாங்க ஆசைப்பட்டு ரூ.40 ஆயிரத்தை பறிகொடுத்த இளம் பெண்.. என்ன நடந்தது?
பெங்களூர்: இன்றைக்கு எல்லாருமே ஆன்லைனில் உணவு பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிடுவது அதிகரித்துவிட்டது. ஆன்லைன் உணவு டெலிவரியில் சில சமயங்களில் முறைகேடுகள் நடக்கின்றன. ஏராளமான உணவு டெலிவரி ஊழியர்கள் நல்லவர்கள் என்றாலும், சில ஊழியர்கள் ஏமாற்றுவது நடக்கிறது. ஆன்லைனில் தான் அதிகமாக ஏமாற்றங்கள் நடக்கின்றன. பெங்களூரில் ரூ.400-க்கு ஐஸ்கிரீம் வாங்க முயன்ற பெண், ரூ.40 ஆயிரத்தை பறிகொடுத்துள்ளார். அந்த குறிப்பிட்ட நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
உணவு வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் முதல் 5 நிமிடம் வரை காத்திருந்தால் போதும், வீட்டிற்கே வந்துவிடும்.ஐஸ்கிரீம் தொடங்கி பிரியாணி வரை, காய்கறி தொடங்கி சிக்கன் மட்டன் வரை ஆன்லைனில் டெலிவரி செய்யாத பொருட்களே இல்லை. ஆன்லைன் டெலிவரி என்பது மிகவும் அதிகரித்துவிட்டது. பணம் உள்ள பலர் ஆன்லைனில் தான் வாங்குகிறார்கள். தங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் பல பணக்காரர்கள் ஆன்லைனில் வாங்குவது அதிகரித்துவிட்டது.

பெங்களூரு அலி அஸ்கர் ரோட்டில் வசித்து வரும் சுனிதா கரோனா என்ற பண் ஆன்லைன் மூலம் உணவு பொருட்கள் விற்கும் நிறுவனத்தின் மூலமாக 2 கிலோ மாதுளை பழங்கள், 250 கிராம் கொத்தமல்லி மற்றும் ஒரு லிட்டர் ஐஸ்கிரீம் ஆகியவற்றை ஆர்டர் செய்திருக்கிறார். இதற்கான பணத்தை ஆன்லைன் மூலமாகவே சுனிதா செலுத்தி இருந்தார். அதன்படி, விற்பனை பிரதிநிதியும் சுனிதா ஆர்டர் செய்த பொருட்களை, அவரது வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்து சென்றுவிட்டார்.
அந்த பார்சலை திறந்து பார்த்தபோது 2 கிலோ மாதுளை, 250 கிராம் கொத்தமல்லி இருந்தது. ஆனால் ஐஸ்கிரீம் இல்லாததை கண்டு சுனிதா அதிர்ச்சி அடைந்தார். உடனே கூகுளில் இருந்த, அந்த ஆன்லைன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்கு சுனிதா தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். எதிர்முனையில் பேசிய நபரும், ஆன்லைன் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் என்று கூறியிருக்கிறார்.
மேலும் நீங்கள் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமின் விலை ரூ.400 ஆகும், அந்த பணத்தை திரும்ப அனுப்பி வைத்து விடுவதாக கூறியுள்ளார். இதற்காக சுனிதாவின் வங்கி கணக்கு விவரங்களை பெற்றுக் கொண்ட மர்மநபர், செல்போன் செயலி ஒன்றில் தான் அனுப்பும் லிங்கில் சென்று அதில் கேட்கப்படும் விவரங்களை நிரப்பும்படி கூறினாராம். அதன்படி, சுனிதாவும் அதை கிளிக் செய்துள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.40 ஆயிரம் எடுக்கப்பட்டு இருப்பதாக செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்தது.
இதைப்பார்த்து சுனிதா அதிர்ச்சி அடைந்தார். மர்மநபர் தன்னிடம் ரூ.40 ஆயிரத்தை மோசடி செய்திருப்பதையும் அவர் உணர்ந்தார். இதுபற்றி பெங்களூர் விதான் சவுதா போலீஸ் நிலையத்தில் சுனிதா புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர். ஆன்லைனில் யாராவது லிங்கை கிளிக் செய்ய சொன்னால் தயவு செய்து கிளிக் செய்யாதீர்கள்..அப்புறம் அக்கவுண்டில் உள்ள மொத்த பணமும் போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதன்பிறகு காவல் நிலையத்திற்கு அலைய வேண்டிய நிலை ஏற்படலாம்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications