எடியூரப்பா மீது பாலியல் புகார் அளித்த பெண் திடீர் மரணம்.. போலீசார் சொல்வது என்ன?
பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா மீது பாலியல் தொல்லை புகாரளித்த பெண் உயிரிழந்துள்ளர். கர்நாடாகாவில் இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா மீது பெங்களூர் சதாசிவநகர் காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

எடியூரப்பா மீது புகார்: பெங்களூரில் உள்ள எடியூரப்பாவின் வீட்டுக்கு உதவி கேட்டு சென்றிருந்த போது 17 வயது மகளை வீட்டின் ஒரு அறைக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண்ணின் தாய் எடியூரப்பா மீது புகார் அளித்திருந்தார். கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி உதவி கேட்டு தாயாருடன் எடியூரப்பா வீட்டிற்கு சென்றதாகவும் அப்போது தனக்கு எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி புகார் அளித்துள்ளார்.
சிறுமி புகார் மனு: தன்னை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதை வெளியில் கூற வேண்டாம். உனக்கு தேவையான உதவிகளை செய்கிறேன். இதையும் மீறி வெளியே கூறினால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எடியூரப்பா மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் மனுவில் கூறியுள்ளார். கர்நாடகாவில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எடியூரப்பா மறுப்பு: லோக்சபா தேர்தலுக்கு முன்பாக எடியூரப்பா மீது பதிவான இந்த போக்சோ வழக்கு பெரும் நெருக்கடியை பாஜகவிற்கும் கொடுத்தது. இந்த வழக்கில் எடியூரப்பாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். எனினும், தன் மீதான குற்றச்சாட்டை எடியூரப்பா மறுத்தார். எடியூரப்பா மீது புகார் அளித்த அந்த பெண், இதற்கு முன்பு முக்கிய பிரமுகர்கள், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது புகார் அளித்திருந்ததும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் தெரியவந்தது.
புகார் கொடுத்த பெண் உயிரிழப்பு: இதனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், எடியூரப்பா மீது போக்சோ வழக்கு தொடர்ந்த அந்த பெண் உளிமாவு அருகே பன்னரகட்டா சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று திடீரென்று உயிரிழந்தார். மூச்சு திணறல் உள்ளிட்ட உடல் நல பாதிப்புகள் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
போலீசார் விசாரணை: அங்கு சிறுமியின் தாய்க்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனலிக்காமல் இறந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எடியூரப்பா மீது போக்சோ வழக்கு தொடர காரணமாக இருந்த பெண் உயிரிழந்து இருப்பது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் உயிரிழப்பு தொடர்பாக சதாசிவநகர் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் சொல்வது என்ன?: 53 வயதான அந்த பெண்ணுக்கு நுரையீரல் புற்றுநோய் இருந்ததாக மருத்துவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இயற்கையான முறையிலேயே பெண் உயிரிழந்து இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. எனினும், உயிரிழந்த பெண்ணின் உடலுக்கு பிரதேச பரிசோதனை மேற்கொண்டு உயிரிழப்புக்கு உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும் என சில அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications