பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆமாங்க.. அந்த குரல் என்னோடது தான்.. பேரத்தை ஒத்துக்கொண்ட எடியூரப்பா.. அதிர்ச்சியடைந்த பாஜக

Google Oneindia Tamil News

Recommended Video

    Yeddyurappa audio: சர்ச்சை ஆடியோ பதிவு.. ஒப்புக்கொண்ட எடியூரப்பா- வீடியோ

    பெங்களூரு: கர்நாடக அமைச்சர்களிடம் குதிரை பேரம் பேசியது தொடர்பாக அம்மாநில முதல்வர் குமாரசாமி வெளியிட்ட ஆடியோ பதிவு தம்முடையதுதான் என்று எடியூரப்பா ஒப்புக்கொண்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் நாகண்ண கவுடாவின் மகன் சரண்கவுடாவை சந்தித்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் சரண்கவுடா அம்மாநில முதல்வர் குமாரசாமி சொல்லியே தன்னை சந்திக்க வந்ததாக எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.

    Yeddyurappa admitted kumaraswamys tape is true and he admitted his voice

    இதுகுறித்து மேலும் எடியூரப்பா பேசியதாவது:சரண்கவுடா பதிவு செய்த ஆடியோ கிளிப்பை தங்களின் வசதிக்கேற்ற வகையில் மாற்றி உள்ளனர். குமாரசாமி புதிதாக கீழ்த்தரமான அரசியலில் இறங்கியுள்ளார். சரண் கவுடாவிடம் தான் பேசிய முழு உரையாடலையும் அவர்கள் வெளியிடவில்லை என்று தெரிவித்தார்.

    இதற்கு முன் அந்த ஆடியோ பதிவு போலியானது என்றும், தான் எந்த தலைவரையும் சந்திக்கவில்லை என்றும் எடியூரப்பா தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது அந்த ஆடியோவில் உள்ள குரல் தம்முடையது என்று ஒத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Karnataka BJP president Yeddyurappa admitted that the voice in the audio clip released by Chief Minister HD Kumaraswamy is his and that he met JDS MLA Naganagowda's son Sharanagouda.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X