பெங்களூரில் இன்று முதல் 3 நாள் வெளுக்கப்போகும் கனமழை.. 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
பெங்களூர்: பெங்களூர் உள்பட 13 மாவட்டங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரில் இன்று முதல் 3 நாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பிற இடங்களில் மழை என்பது இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகாவில் 11 மாவட்டங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா உள்பட 11 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த லிஸ்ட்டில் சிவமொக்கா, துமகூரு, கோலார், குடகு, சிக்கமகளூரு, சிக்கபள்ளாப்பூர், பெங்களூர் நகர், பெங்களூர் புறநகர் உள்ளிட்ட மாவட்டங்களும் அடங்கி உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரை எடுத்து கொண்டால் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பெங்களூர் புறநகர், கோலர், சிக்கபள்ளாப்பூர் மாவட்டங்களை சுற்றி கனமழை வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக மஞ்சள் அலர்ட் என்பது குறைந்தபட்சம் 6 சென்டிமீட்டர் முதல் 12 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கும்போது தான் விடுக்கப்படும்.
அந்த வகையில் பெங்களூர், பெங்களூர் புறநகர் உள்பட 11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் இன்று முதல் வரும் 7 ம் தேதி வரை மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர வடகர்நாடகா மாவட்டங்களாக உள்ள பெலகாவி, தர்வார், கதக், ஹாவேரி, கொப்பல், ராய்ச்சூர் மாவட்டங்களிலும் நாளை முதல் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கல்லூரி காதலனுடன் கள்ளக்காதல் + ரூ.1000 கோடி சொத்து.. மகளையே கொன்று நாடகமாடிய பெங்களூர் பெண் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications