வைரமுத்துவை திட்ட கூறி.. கெட்ட வார்த்தையை சொல்லி தந்தார் நித்தியானந்தா.. மீண்டுவந்த பெண் ஷாக் தகவல்
வைரமுத்துவை திட்ட சொன்னதே நித்யானந்தாதான் என்று பெண் புகார் தெரிவித்துள்ளார்
Recommended Video
பெங்களூரூ: "எனக்கு கெட்ட கெட்ட வார்த்தைகளை சொல்லி தந்து, வைரமுத்துவை திட்ட சொன்னதே நித்யானந்தாதான்" என்று ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
பெங்களூரை சேர்ந்தவர் ஜனார்த்தனா ஷர்மா. இவர் கடந்த 2013-ல் பெங்களூரிலுள்ள நித்தியானந்தாவுக்குச் சொந்தமான பெங்களூரு கல்வி நிறுவனத்தில் 7 முதல் 15 வயதுடைய 3 மகள்களை கொண்டுபோய் சேர்த்தார். அதில் 2 பேர் மட்டும் அஹமதாபாத் ஆசிரமத்துக்கு இடமாற்றப்பட்டனர்.
இது அறிந்த ஷர்மா, போலீசார் உதவியுடன் ஒரு மகளை மீட்டுவிட்டார். ஆனால், இன்னும் 2 மகள்கள் நித்யானந்தா ஆசிரமத்தில் அடைந்து வைத்துள்ளதாகவும், மூத்த மகள்கள் லோகமுத்ரா, நந்திதாவை மீட்டு தர வேண்டும் என்றும் சொல்லி, கோர்ட் வாசலில் ஏறி இறங்கி வருகிறார்.

வைரமுத்து
இப்போது ஷர்மா மீட்டு கொண்டு வந்த, 3 பெண்களில் ஒருவரை பற்றின செய்திதான் இது. இந்த பெண்தான், ஆண்டாள் விவகாரம் எழுந்தபோது, வைரமுத்துவை திட்டி தீர்த்தவர். ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மன்னிப்பு கேட்டுவிட்டாலும், நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து சிறுமிகள் வைரமுத்துவை திட்டி அந்த சமயத்தில் வீடியோ வெளியிட்டிருந்தனர். மிக மோசமான, கொச்சையான வார்த்தைகளுடன் அந்த வீடியோவில் அந்த பெண் பேசியிருந்தார்.

தலையை வெட்டணும்
"வே.. மகன், உங்க அம்மா வே.., தலையை வெட்டணும்" என்றெல்லாம் அந்த சிறுமி வைரமுத்துவை திட்டி தீர்த்திருந்ததால், இந்த வீடியோ படுவைரலானது. பலரும் இந்த சிறுமியின் பேச்சை கண்டு அதிர்ந்தனர். அதிலும் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கொதித்தெழுந்துவிட்டார். கர்நாடக மாநில டிஜிபியிடம் புகார் ஒன்றை அளித்தார்.

ஆபாச வார்த்தை
"ஆசிரமத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு ஆபாச வார்த்தைகள் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அவர்களது வயதுக்கும், அந்த வார்த்தைகளுக்கும் துளியும் சம்பந்தமில்லை. முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு எதிராக இதுபோன்று பேச முடியுமா? என்று கேட்டு, மத பிரச்சனைகளை தூண்டுகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டிருந்தது நினைவிருக்கலாம்.

அதிர்ச்சி தகவல்
இப்போது, வைரமுத்துவை திட்டிய இந்த பெண், நித்தியானந்தா ஆசிரமம் குறித்து, ஒரு பிரபல டிவி சேனலுக்கு பேட்டி தந்துள்ளார். அதில் அந்த பெண் முகத்தை துணியால் மறைத்தபடி பேசி உள்ளார். அவர் சொல்லி உள்ளதாவது: "ஆண்டாள் விவகாரம் எழுந்தபோது, கவிஞர் வைரமுத்துவை திட்ட சொல்லி கொடுத்ததே நித்யானந்தாதான்.. அதுவும் கெட்ட வார்த்தைகளைதான் சொல்லி தந்ததே நித்யானந்தாதான்" என்று புது குண்டை தூக்கி போட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications