பெங்களூரில் பட்டப்பகலில் உடம்பில் ஒட்டுத் துணி கூட இல்லாமல்! நிர்வாணமாக வந்த பெண்ணால் அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் நட்ட நடு சாலையில் பெண் ஒருவர் உடம்பில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் நடந்துக் கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூர் நகரில் பரபரப்பு நிறைந்த சாலைகளில் ஒன்று எச்.எஸ்.ஆர். லே அவுட் பகுதி ஆகும். இங்கு இளம்பெண் ஒருவர் தெருவில் நிர்வாண கோலத்தில் நடந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

bangalore road

நிர்வாணமாக சிறிது தூரம் நடந்துவிட்டு பின்னர் திரும்பி செல்கிறார். திரும்பவும் அவர் நடந்து வருகிறார். பெண்ணின் இந்த செயலை கண்ட அவ்வழியாக போவோர் வருவோர் கண்களை மூடிக் கொண்டனர்.

எனினும் அந்த பெண், கேசுவலாக எந்த வித கூச்சம் நாச்சமின்றி நிர்வாணமாக நடந்து சென்றார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. ஏதோ பேஷன் ஷோவுக்கு செல்வது போல் சிறிது தூரம் சென்றுவிட்டு மீண்டும் திரும்புகிறார்.

அந்த பகுதியில் நிறைய பிஜி ஹாஸ்டல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு வேளை யாராவது ஹாஸ்டலில் இருந்தவர்கள் இந்த பெண்ணிடம் நிர்வாணமாக சாலையில் செல்ல வேண்டும் என பந்தயம் கட்டினார்களா என தெரியவில்லை.

bangalore road

பெண்ணின் இந்த செயலை பலர் கண்டித்து வருகிறார்கள். பெண்களுக்கான அதிகாரமளித்தல் என்பது அவர் விரும்பியதை செய்யலாம் என்பதற்காகத்தான். எனவே யாரும் அவரை திட்டாதீர்கள் என்றும் ஒரு கமெண்ட் வருகிறது. மேலும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சிலர் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இல்லாவிட்டால் விளம்பர நோக்கில் இப்படி செய்கிறாரா என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்த வீடியோ இந்த பெண்ணின் பெற்றோரின் பார்வைக்கு போனால் அவர்கள் எப்படி துடித்து போவார்கள் என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

கலாச்சாரம், பண்பாட்டுக்கு பெயர் போன பெங்களூரில் தற்போது இது போன்ற செயல்கள் நடப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

bangalore road

போலீஸார் அந்த பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அண்மையில் டெல்லி மெட்ரோ ரயிலில் பெண் ஒருவர் அரை நிர்வாண ஆடையில் வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அது போல் டெல்லியில் ஒரு பேருந்தில் அரை நிர்வாணமாக பெண் ஒருவர் ஏறினார். மேலும் மெட்ரோ ரயிலில் ஹோலி பண்டிகைக்காக இரு பெண்கள் உடம்பில் கலர் பவுடர் பூசிக் கொண்டே ஆபாசமான செய்கைகளை செய்தது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

இந்த பெண்களை தட்டிக் கேட்க ஒருவர் கூட இல்லை. இவர்களை எல்லாம் மெட்ரோ ரயில் நிர்வாகம் எப்படி அனுமதித்தது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் பெங்களூரில் நிர்வாணமாக பெண் ஒருவர் சாலையில் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+