பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கை நிறைய சம்பளம்.. அப்பார்ட்மென்ட் வீடு! ஆனால் ஐடி ஊழியர் நிகழ்த்திய கொடூரம்.. 13 பெண்கள் பாதிப்பு

தில் பிரசாத் கை நிறைய சம்பாதித்தாலும் அவர் இந்த பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இவரது கல்லூரி நாட்களிலிருந்தே இந்த பிரச்னை நீண்டு வந்திருக்கும் என்று நினைக்கிறோம் என காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Google Oneindia Tamil News

பெங்களூரு: சமூக வலைத்தளங்களில் பெண் பெயரில் போலி கணக்கு தொடங்கி ஐ.டி துறை வேலை வாங்கி தருவதாக கூறி 13 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கர்நாடகாவில் பேசுபொருளாகியுள்ளது.

கர்நாடக தலைநகர் பெங்களூருவின் கோரமங்லாவில் வசித்து வருபவர் ஐ.டி ஊழியர் தில் பிரசாத். இவருக்கு சொந்த ஊர் ஆந்திர மாநிலமாகும். இந்நிலையில் இவரை கடந்த மூன்றாம் தேதி கர்நாடக காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த கைது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, "கடந்த 29ம் தேதி எங்களுக்கு ஒரு புகார் கிடைத்தது. ஐ.டி துறையில் தீவிரமாக வேலை தேடிக்கொண்டிருக்கும் ஒரு இளம்பெண்தான் இந்த புகாரை எங்களுக்கு கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட எங்களுக்கு பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. அதாவது எங்களிடம் புகார் அளித்த இளம்பெண் வேலை தேடி இவரிடம் வந்ததாகவும், ஆனால் தில் பிரசாத் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியிருந்தார். புகாரின் அடிப்படையில் விசாரணைக்காக பிரசாத்தின் வீட்டிற்கு சென்றிருந்தோம். பிரசாத் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனியாக தங்கியிருந்தார்.

நானும் பொது குழு உறுப்பினர்.. அதிமுக வேட்பாளருக்கான சுற்றறிக்கை கிடைக்கவில்லை- மைத்ரேயன் ஆதங்கம் நானும் பொது குழு உறுப்பினர்.. அதிமுக வேட்பாளருக்கான சுற்றறிக்கை கிடைக்கவில்லை- மைத்ரேயன் ஆதங்கம்

ஐடி வேலை

ஐடி வேலை

இவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் ஆந்திராவில் இருக்கின்றனர். இந்நிலையில், அவரது வீட்டில் இருந்த பொருட்களை சோதனை செய்தோம். அப்போது பிரசாத் எதிர்பாராத விதமாக உள்ளே நுழைந்தார். எங்களை பார்த்து அதிர்ச்சியில் அவர் பதற்றமடைந்தார். நாங்கள் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்த போது வர மறுப்பு தெரிவித்துவிட்டார். விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லையெனில் கைது செய்ய நேரிடலாம் என்று எச்சரித்ததையடுத்து காவல் நிலையத்திற்கு வந்தார். விசாரணையில் தான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை என்று மறுத்தார். எங்களிடம் புகார் இருக்கிறது என்றும் புகாரின் அடிப்படையிலேயே விசாரணை நடைபெறுகிறது என்றும் கூறினோம். அப்போது கூட அவர் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.

செல்போன் லேப்டாப்

செல்போன் லேப்டாப்

இதனையடுத்து அவரது செல்போன் மற்றும் லேப்டாப்களை நாங்கள் பறிமுதல் செய்து சொதனை செய்து பார்த்தோம். அதில்தான் எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இவருடைய செல்போனிலும், லேப்டாப்பிலும் சுமார் 5 போலி இன்ஸ்டாகிரம் கணக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து கேட்டதற்கு பிரசாத் எந்த விளக்கமும் கூறவில்லை. இதனையடுத்து மேலும் சோதனை செய்து பார்த்ததில் லேப்டாப்பில் ஆபாச படங்கள் இருந்துள்ளன. ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு பெண்களோடு இவர் உடலுறவு கொண்டிருக்கிறார். இது தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு பதில் ஏதும் கூறவில்லை.

மேனேஜர்

மேனேஜர்

இந்த விவகாரம் குறித்து முறையாக பதிலளிக்கவில்லையெனில் சட்ட ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று கூறினோம். அப்போதுதான் இந்த விவகாரம் குறித்து ஒப்புக்கொண்டார். அதாவது இவர் மோனிகா, மேனேஜர் என்று 5 இன்ஸ்டாகிராம் ஐடியை உருவாக்கியுள்ளார். இந்த ஐடி வைத்து வேலை தேடும் பெண்களிடம் ஐ.டி துறையில் வேலை இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதனை நம்பிய பெண்கள் இவரிடம் பேசியுள்ளனர். அதாவது மோனிகா எனும் போலி அக்கவுன்டில் சேட் செய்து பேசியுள்ளனர். இதனையடுத்து மோனிகா எனும் ஃபேக் அக்கவுண்ட் மூலம் தன்னுடைய செல்போன் எண்ணை அவர் பெண்களிடம் பகிர்ந்திருக்கிறார்.

பலாத்காரம்

பலாத்காரம்

இந்த செல்போன் எண்ணில் தன்னை தொடர்புகொள்ளும் பெண்களிடம் வேலையை தாண்டி சில விஷயங்களை பேசியிருக்கிறார். மட்டுமல்லாது தன்னை தனிமையில் சந்திக்க வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட ஓட்டலுக்கு வர சொல்லியுள்ளார். அப்படி நம்பி வந்த பெண்களை இவர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இப்படியாக சுமார் 13 பெண்களை பலாத்காரம் செய்திருக்கிறார். பல பெண்கள் இது ஒரு ஏமாற்று வேலை என்று தெரிந்துக்கொண்டு விலகியுள்ளனர். ஆனால் ஏற்கெனவே இவர் ஓட்டலில் ரகசிய கேமிரா மூலம் இந்த பலாத்கார சம்பவத்தை படம் பிடித்து வைத்துள்ளார்.

மிரட்டல்

மிரட்டல்

இப்படி எடுக்கப்பட்ட படத்தை வைத்து இந்த 13 பெண்களையும் மீண்டும் மீண்டும் தன்னுடைய ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். ஆனால் இதில் ஒரு பெண் மட்டும் துணிச்சலாக எங்களிடம் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில்தான் நாங்கள் பிரசாத்தை கைது செய்தோம். பிரச்னைகளிலிருந்து தப்பி ஒரே தீர்வு காவல்துறைதான் என்பதை பெண்கள் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும்" என்று பெங்களூரு தென்கிழக்கு டிசிபி சிகே பாபா கூறியுள்ளார். இந்த சம்பவம் பெங்களூரு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A youth has been arrested for raping 13 women on social media claiming to get jobs in the IT department by starting a fake account in the name of a woman. This incident has become a talking point in Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X