பற்றி எரிந்த ஓலா ஷோரூம்.. எலக்ட்ரிக் பைக்கை பழுது பார்க்காததால் இளைஞர் செய்ததை பாருங்க! போச்சே
பெங்களூர்: கர்நாடகாவில் எலக்ட்ரிக் பைக்கில் ஏற்பட்ட பழுதை முறைப்படி சரிசெய்யாததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஷோரூமில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் உம்னாபாத் என்ற டவுன் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான பைக் ஷோரூம் உள்ளது. இந்நிலையில் தான் நேற்று காலையில் பைக் ஷோரூமில் இருந்து கரும்புகை வெளிவந்தது.

இதுபற்றி அறிந்தவுடன் அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வந்து ஷோரூமில் பிடித்த தீயை போராடி அணைத்தனர்.
இருப்பினும் இந்த தீவிபத்தால் 6 எலக்ட்ரிக் பைக் மற்றும் ஷோரூமில் இருந்த ஏராளமான பொருட்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதுபற்றி கலபுரகி சவுக் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதலில் இந்த தீவிபத்து என்பது மின்கசிவு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்று நினைத்தனர்.
ஆனால் ஷோரூமை ஆய்வு செய்தபோது தான் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது ஷோரூமுக்கு யாரோ ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீவைத்து இருப்பது தெரியவந்தது. இதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முகமது நதீம் (வயது 32) என்பவர் ஷோரூம் அருகே வந்து சென்றதும், அதன்பிறகே ஷோரூம் தீப்பற்றி எரிந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து முகமது நதீமை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கூறிய தகவல் அதிர வைத்தது. அதாவது முகமது நதீம் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அந்த ஷோரூமில் புதிதாக ஓலா எலக்ட்ரிக் பைக்கை வாங்கியுள்ளார். இந்த பைக் அடிக்கடி பிரச்சனையாகி உள்ளது.
முதல் 20 கிமீ-க்கு டோல் கட்டணம் கிடையாது.. வாகன ஓட்டிகளுக்கு மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்
அதாவது பைக் அடிக்கடி பழுதாகி உள்ளது. இதையடுத்து முகமது நதீம் அந்த ஷோரூமிற்கு சென்று சரிசெய்யும்படி கூறியுள்ளார். ஊழியர்கள் பழுது நீக்கி கொடுத்துள்ளனர். ஆனால் அடுத்தடுத்து தொடர்ந்து அவரது பைக் பழுதாகி வந்துள்ளது. இதனால் சரியாக பழுது நீக்கி தர வேண்டும். இல்லாவிட்டால் வேறு பைக் தர வேண்டும் என்று முகமது நதீம் கூறியுள்ளார். ஆனால் ஷோரூம் தரப்பில் புதிய பைக் வழங்காமல் மீண்டும் அதே பைக்கை பழுது நீக்கி வழங்கி உள்ளனர்.
ஆனாலும் அவருடைய பைக் தொடர்ந்து பிரச்சனை தந்ததால் ஆத்திரமடைந்த முகமது நதீம் பெட்ரோல் வாங்கி வந்து ஷோரூமில் ஊற்றி தீவைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து முகமது நதீமை கலபுரகி சவுக் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications