Zero Shadow day: பெங்களூரில் இன்று நடக்கும் அதிசயம்.. கொஞ்ச நேரம் நிழல் விழாதாமே! ஏன் தெரியுமா?
பெங்களூர்: இன்று பெங்களூரில் சிறிது நேரத்திற்கு செங்குத்தான பொருட்களின் மீது நிழலே விழாது என்று தெரிவித்து இருக்கும் விஞ்ஞானிகள், இந்த அரிய நிகழ்வுக்கு ஜீரோ ஷேடோ தினம் என்று பெயர் வைத்து உள்ளார்கள். நாளை இது எப்போது நடைபெறும்? ஏன் இவ்வாறு நடக்கிறது? விரிவாக பார்ப்போம்.
வானியலில் பல்வேறு அரிய நிகழ்வுகள் ஏற்பட்டு நம்மை வியப்படைய செய்து வருகின்றன. அதுபோன்ற வியக்க வைக்கும் அரிய நிகழ்வுதான் ஜீரோ ஷேடோ டே. அதாவது நிழல் இல்லாத தினம். ஒரு நாள் முழுவதும் இதுபோன்று நிழல் விழாது என்று நினைத்துவிட வேண்டும். குறிப்பிட்ட சில நிமிடங்கள் இந்த நிலை நீடிக்கும்.

மிகவும் அரிதாக நடைபெறும் இந்த நிகழ்வில் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இன்று ஏற்படுகிறது. இதனை பெங்களூரு கோரமங்களாவில் அமைந்து உள்ள இந்திய வான் இயற்பியல் நிறுவனம் உறுதிபடுத்தி இருக்கிறது. அதன்படி மதியம் 12.17 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளார்கள். இந்திய வான் இயற்பியல் வளாகத்தில் இதற்கான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
குறிப்பிட்ட 12.17 மணியளவில் செங்குத்தான பொருட்களுக்கு நிழல் தெரியாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சூரியன் குறுகிய காலம் மேல்நோக்கி செல்வதன் காரணமாக பூவியில் டிராபிக் ஆப் கேன்சர் மற்றும் டிராபிக் ஆஃப் கேப்ரிகார்ன் ஆகிய மண்டலங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் உள்ளூர் நண்பகல் நேரத்தில் நிழல் படாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
பெங்களூருவில் இன்று மட்டுமல்லாது வரும் ஆகஸ்டு 18 ஆம் தேதியும் நிகழ் இல்லாத நாள் இருக்கும் என்று கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சூரியனை பொறுத்தவரை அது நேரடியாக பூமத்திய ரேகைக்கு மேலே அமைந்து இருக்கிறது. புவியின் மேற்பரப்பில் அதன் கதிர்கள் செங்குத்தாக விழும். அப்போது பூமத்திய ரேகைக்கு அருகே இருக்கும் இடங்களில் மார்ச் 29 தேதியும், செப்டம்பர் 22 ஆம் தேதியும் நிழல் இல்லா தினம் வரும். அதற்கு தொலைவான பகுதிகளில் தாமதமாக இந்த தினம் வரும். இந்த நிகழ்வை உலகம் முழுவதும் உள்ள கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications