புது வீட்டை விடுங்க.. பிக் பாஸ் பாவனி, அமீர் சொன்ன குட் நியூஸ்..அந்தப் புகைப்படத்தில் கவனிச்சீங்களா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகை பாவனி மற்றும் டான்ஸ் மாஸ்டர் அமீர் இருவரும் சேர்ந்து புதியதாக கார் ஒன்றை வாங்கி இருக்கின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டு முதலில் நண்பர்களாக இருந்தனர். பிறகு தங்களுடைய காதலை அதிகாரப்பூர்வமாக அனைவருக்கும் அறிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து புதிய வீடு ஒன்று சமீபத்தில் தான் வாங்கி இருந்தனர்.

இந்த நிலையில் பாவனி மற்றும் அமீர் இருவரும் இணைந்து வெளியிட்ட புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் ஏழாவது சீசன் தொடங்கப்பட இருக்கிறது. ஆனால் இதுவரைக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ஒரு சிலர் மட்டும்தான் தங்களுடைய வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு சிலர் வந்ததும் தெரியாது போனதும் தெரியாது என்று சொல்வது போல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு காணாமல் போய் இருக்கின்றனர்.
ஆனால் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பாவனி மற்றும் அமீர் நிஜ வாழ்க்கையிலும் காதலர்களாக மாறி அடுத்தடுத்த வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கின்றனர். பாவனி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்தம்பி சீரியலில் நந்தினி கேரக்டரில் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான். அதைத் தொடர்ந்து அவர் அடுத்தடுத்து சீரியல் நடித்துக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் அவருடைய நிஜ வாழ்க்கை பல சோகங்கள் நிறைந்ததாக தான் இருந்திருக்கிறது.
ஏற்கனவே நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்த பாவனியின் வாழ்க்கையில் ஒரு சில மாதங்களுக்குள் அந்த வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கிறது. அவருடைய கணவர் தற்கொலை செய்து கொண்ட பிறகுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த டான்ஸ் மாஸ்டர் அமீருடன் முதலில் நட்பு ஏற்பட்டு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தி அதை ரசிகர்களிடமும் பகிர்ந்து இருந்தனர்.

இவர்களுடைய காதலுக்கு அதிகமான ரசிகர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் கூறிவந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து புதியதாக வீடு ஒன்றை வாங்கி இருக்கின்றனர். அது குறித்த செய்தியையும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களிடம் பகிர்ந்தனர். அதைத் தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்திலும் இவர்கள் இருவரும் காதலர்களாக நடித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது இருவரும் சேர்ந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர்.

அதில் புதிய கார் வாங்கி இருக்கிறார்கள். டொயோட்டாவின் உயர் ரக வகையான காரை இவர்கள் வாங்கி இருப்பதற்கு அதிகமான ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அத்தோடு திருமண தேதியையும் சீக்கிரமாக சொல்லுங்கள் திருமண பந்தத்தில் மகிழ்ச்சியோடு வாழுங்கள் என்று அதிகமான ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி இவர்களுடைய திருமண தேதியை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications