ஃபிர் ஏக் பார் மோடி சர்கார்.. அப்படின்னு ஆரம்பிச்சு.. மோடி ஹை தோ மும்கின் ஹை.. அவ்வளவுதாங்க!
டெல்லி: மக்களவை தேர்தலை சந்திக்க பாஜக புதிய கோஷத்துடன் களமிறங்கியுள்ளது.
2014 ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியின் முடிவில் இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷத்தோடு களமிறங்கியது பாஜக. ஆனால் அது இந்திய மக்களிடம் எடுபடவில்லை. மாநிலப் பிரச்சனைகளை முன்வைத்து மக்கள் அந்த தேர்தலை சந்தித்தனர். பாஜக தோல்வியை தழுவியது. காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு அப்போது ஆட்சிக்கு வந்தது.

கடந்த 2014 ம் ஆண்டு மக்களவை தேர்தலை சந்தித்த பாஜக இனி மோடி அரசு என்ற கோஷத்தை முன் வைத்தது. குஜராத்தில் மோடி பல்வேறு சாதனைகளை செய்ததாக ஒரு பிம்பம் கட்டி அமைக்கப்பட்டது. சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் வாயிலாக இந்த பிரச்சாரம் கடுமையாக முன்னெடுக்கப் பட்டது. இனி மோடி அரசு என்ற கோஷம் புகாத இடமே இல்லை என்ற அளவுக்கு அனைத்து இடங்களிலும் ஒரு முழக்கமாக முன் வைக்கப் பட்டது. பாஜக நினைத்தது போலவே இந்த தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது.
தற்போது மீண்டும் மக்களவை தேர்தல் வரவிருந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி எங்கள் பாதுகாவலர் ஒரு திருடன் என்ற கோஷத்தை முன் வைத்தார். தன்னை ஒரு திருடன் என்று ராகுல்காந்தி கூறியதால் அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரட்டும் என்று எண்ணிய பாஜக இந்த நாட்டு மக்கள் அனைவருமே பாதுகாவலர்கள் என்ற பொருள் வரும் வகையில் சவுகிதார் என்ற கோஷத்தை முன் வைத்தனர். பாஜக தலைவர்களும் சமூக வலை தளங்களில் தங்களது பெயர்களின் முன் ஒட்டாக சவுகிதார் என்று பெயர் மாற்றமும் செய்து கொண்டனர். இருந்தாலும் ராகுலின் பாதுகாவலர் ஒரு திருடன் என்ற கோஷத்தின் முன் சவுகிதார் கோஷம் எடுபடவில்லை.

இதனால் தேர்தல் தொடங்கிய பிறகு மீண்டும் ஒருமுறை மோடி அரசு என்னும் பொருளில் ஃபிர் ஏக் பார் மோடி சர்கார் என்ற கோஷமும் மோடி இருந்தால் எதுவும் முடியும் மோடி ஹை தோ மும்கின் ஹை என்ற கோஷமும் முன் வைக்கப்பட்டது. இந்த கோஷங்களை மீண்டும் வேண்டுமா மோடி அரசு எனவும் மோடி இருந்தால் எதுவும் முடியாது எனவும் மாற்றிவிட்டனர் நெட்டிசன்கள்.
இப்படி எந்தப் பக்கம் போனாலும் கேட்டை போடுகிறார்களே என்று எண்ணிய பாஜக மனம் தளராத விக்கிரமாதித்தன் போல பணிகள் தடைபடாமல் இருக்க இதே அரசு தொடரட்டும் என்ற பொருளில் காம் ருகே நா தேஷ் ஜுகே நா என்ற கோஷத்தை முன்னெடுக்க உள்ளது. இந்த கோஷமாவது மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணமாக உள்ளது.
-
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications