தமிழக வங்கிகள் உள்பட 17 வங்கிகள்.. இனி நேரடியாக தங்கம் இறக்குமதி செய்யலாம்.. மத்திய அரசு
மும்பை: இந்தியாவில் செயல்படும் 17 வங்கிகள் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக தங்கம், வெள்ளி, இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, டக்சஸ் பேங்க், பெடரல் பேங்க், ஹெச்டிஎப்சி வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட வங்கிகளுக்கு தங்கம் இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.
ஏப்ரல் 1, 2026 முதல் மார்ச் 31, 2029 வரையிலான காலகட்டத்தில், தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டையும் இறக்குமதி செய்ய 15 வங்கிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் 15 வங்கிகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டையும் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை இடம் பெற்றுள்ளன.

அதேநேரம் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் SBER வங்கி ஆகிய வங்கிகள் தங்கத்தை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி விரிவாக பார்ப்போம்.
இந்திய வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குநரகம் , ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் பட்டியலை மாற்றியமைத்துள்ளது. இதன்படி, வரும் மார்ச் 31, 2029 வரை தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்ய 17 வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின் படி, தங்கம் வெள்ளி இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்ட வங்கிகள் விவர
மொத்தம் 17 வங்கிகளில், 15 வங்கிகள் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டையும் இறக்குமதி செய்ய அனுமதி பெற்றுள்ளன.
மீதமுள்ள 2 வங்கிகள் தங்கம் மட்டும் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன.
அனுமதி பெற்ற வங்கிகளின் பட்டியல்
தங்கம் மற்றும் வெள்ளி இரண்டையும் இறக்குமதி செய்ய அனுமதி பெற்ற சில வங்கிகள்:
ஆக்சிஸ் வங்கி
பேங்க் ஆஃப் இந்தியா
டாய்ச் வங்கி (Deutsche Bank)
ஃபெடரல் வங்கி
எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட்
இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்ஷியல் பேங்க் ஆஃப் சைனா லிமிடெட்
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லிமிடெட்
இண்டஸ்இண்ட் வங்கி லிமிடெட்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
கோடக் மஹிந்திரா வங்கி லிமிடெட்
கரூர் வைஸ்யா வங்கி லிமிடெட்
பஞ்சாப் நேஷனல் வங்கி
ஆர்பிஎல் வங்கி லிமிடெட்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
யெஸ் வங்கி லிமிடெட்
தங்கம் மட்டும் இறக்குமதி செய்ய அனுமதி பெற்ற வங்கிகள்:
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
எஸ்பிஇஆர் வங்கி
பின்னணி
"வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 2023-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன" என்று இந்திய வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கான ஆர்டர்களை இந்திய வங்கிகள் நிறுத்தி வைத்திருந்ததாகவும், இதனால் சுங்கத்துறையில் சரக்குகள் தேங்கியதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications