For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்போன் இன்டர்நெட்டுக்கான வேலிடிட்டி கட்டுப்பாட்டை நீக்கியது ஏர்டெல்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: ஏர்டெல் தனது பிரிபெய்டு இணையதள சேவைக்கு வேலிடிட்டி எனப்படும் காலக்கெடுவை அகற்றியுள்ளது. டேட்டா இருக்கும் நாள்வரை காலக்கெடு பற்றி கவலைப்படாமல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும்.

நாட்டில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட பாரதி ஏர்டெல் நிறுவனம் இன்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, பிரிபெய்டு வாடிக்கையாளர்கள் தங்களது இணையதள சேவைக்காக செய்துகொள்ளும் ரீசார்ஜ்ஜுகளுக்கு வேலிடிட்டி எல்லை கிடையாது.

Airtel launches mobile internet packs with unlimited validity

உதாரணத்திற்கு, 1 எம்பி டேட்டா பயன்படுத்த வாடிக்கையாளர் ஒருவர் ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்குள் இணையதள டேட்டாவை காலி செய்தாக வேண்டிய கட்டாயம் முன்பு இருந்தது. ஆனால், இனிமேல் டேட்டாவை காலி செய்ய காலக்கெடு கிடையாது. உபயோகம் செய்து டேட்டா காலியான பிறகு ரீசார்ஜ் செய்தால் போதும். அந்த நிறுவன மார்க்கெட் இயக்குநர் அஜய் புரி இத்தகவலை இன்று தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் தற்போது 5 வகை பிளான்கள் தரப்பட்டுள்ளன. 3 டெல்லியிலும், 3 மும்பையிலும் செயல்படுத்தப்படும்.

English summary
Bharti Airtel on Thursday announced launch of special mobile internet schemes, which will allow its prepaid customers to enjoy data without worrying about validity of their plans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X