Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காசில்லைனு புலம்புனாங்க..14000 கோடிக்கு தங்கம் வாங்கிருக்காங்க! அக்ஷய திரிதியையில் அள்ளிய நகை கடைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் அக்ஷய திருதியை நாளில் தங்கத்தின் விற்பனை களைகட்டி இருந்தது. நேற்று மட்டும் சுமார் 14,000 கோடிக்கு மேல் தங்கம் விற்பனை நடைபெற்றதாகவும், இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகம் என்கின்றனர் நகைக்கடை உரிமையாளர்கள். கடந்த ஆண்டும் நகை விலை 54 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய மூன்றாவது தினம் திருதியை திதியில் வரும். அந்த நாள் அக்ஷய திருதியை என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் லட்சுமி தேவியை வணங்கி, குபேரனை நோக்கி கேட்டால் கேட்டது கிடைக்கும் என்றது. நம்பிக்கை இந்த ஆண்டு அட்சய திருதியை நேற்று முன் தினம் காலை தொடங்கி நேற்று மதியம் 2.12 வரை தொடர்ந்தது.

chennai Akshaya Tritiya gold

இந்த நாளில் தங்கம் வெள்ளி உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கினால் அது ஆண்டு முழுவதும் பல்கிப் பெருகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் நேற்று அட்சய திருதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலையில் இருந்து நகைக்கடைகள் தொடங்கப்பட்ட நிலையில் பல்வேறு ஆஃபர்களை அள்ளி வீசின. தங்கத்தின் எடைக்கு நிகராக வெள்ளி, பரிசு பொருட்கள், குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தங்க நாணயம், செய்கூலி சேதாரத்தில் தள்ளுபடி என பல்வேறு ஆஃபர்கள் அளிக்கப்பட்டது.

காலையில் திறக்கப்பட்ட நகைக்கடைகள் நள்ளிரவு ஒரு மணி வரை திறந்திருந்த நிலையில் விற்பனை கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கூட்டம் அலைமோதும் என்பதால் பலர் ஏற்கனவே முன்பணம் செலுத்தி நகைகளை புக் செய்திருந்தனர். அதன்படி அந்த அட்வான்ஸ் ரசீதை கொடுத்து நகைகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர். தொடர்ந்து மாதாந்திர சேமிப்பு திட்டம், தங்க நாணயங்களை மாற்றிக் கொள்வது, பழைய நகைகளை கொடுத்து புதிய நகை மற்றும் கூடுதல் பணம் கொடுத்து நகைகளை வாங்கியதை பார்க்க முடிந்தது.

மேலும் செய்கூலி சேதாரம் இல்லை என்பதால் தங்க காசுகளின் விற்பனையும் அதிகமாக இருந்தது. இதேபோல வெள்ளி உள்ளிட்டவற்றின் விற்பனையும் அதிகரித்து இருந்தது. நகைக்கடைகள் அதிகம் இருக்கும் வீதிகள் திருவிழா போல காட்சி அளித்தன. கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் ஆபரண தங்கத்தின் விலை 54,000 என்ற நிலையில் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஒரு சவரன் தங்கம் 71 ஆயிரத்து 840 எனவும் ஒரு கிராம் 8,980 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆனால் தங்கத்தின் மீதான மோகமும் அக்ஷய திருதியை நாளில் தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆர்வமும் விற்பனையை அதிகரித்தே காட்டியது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கிட்டத்தட்ட தங்கத்தின் விலை 20 ஆயிரம் ரூபாய் என அதிகரித்து இருந்தாலும், விலை உயர்வை பற்றி கவலைப்படாத மக்கள் அதிக அளவில் நகைகள் வாங்கிச் சென்றனர். இதுகுறித்து பேசிய சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க தலைவரான ஜெயந்திலால் பேசும் போது," கடந்த ஆண்டு விடவும் இந்த ஆண்டு 20% வரை கூடுதலாக விற்பனை நடைபெற்றிருக்கிறது. அட்சய திருதியை முன்னிட்டு விலை அதிகரித்தாலும் கவலை இன்றி மக்கள் தங்க நகைகளை வாங்கி சென்றனர். பல கடைகளில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள பிரபலமான டி நகர் நகைக்கடைகளில் மக்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து நகைகளை வாங்கிச் சென்றனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தங்கம் விற்பனை ஆகியுள்ளது. இதே போல சேலம், மதுரை, நெல்லை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் நகை கடைகளில் விற்பனை அதிகமாக இருந்தது. தங்கத்தின் விலை விண்ணை தொட்டாலும் தங்கத்தின் மீதான மோகமும் மக்களின் தேவையும் குறையவில்லை. சிறுகடைகளில் கூட அதிக அளவில் தங்க விற்பனை நடைபெற்றது. தற்போதைக்கு தங்கத்தில் விலை குறைய வாய்ப்பில்லை, வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கலாம் என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+