ஒரு நிமிஷம் நில்லுங்க.. ஏடிஎம்ல பணம் எடுக்க போறீங்களா? 100 ரூபாய் எடுத்தாலும் 25 ரூபாய் ஃபைன்! கவனம்
சென்னை: தற்போது வங்கிகள் 3 முதல் 5 முறை கட்டணமில்லா ஏடிஎம் பரிவர்த்தனை வழங்கி வரும் நிலையில், இன்று முதல் மெட்ரோ ஏடிஎம்களில் மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால் 23 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பேலன்ஸ் செக், மினி ஸ்டேட்மெண்ட் உள்ளிட்ட நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு சில வங்கிகளில் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. அந்த வகையில் இ-காமர்ஸ், டிஜிட்டல் பரிவர்த்தனை, யுபிஐ உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு, வங்கிகள் ஊக்குவித்து வருகிறது.
பணம் செலுத்த எடுக்க என இரண்டு விஷயங்களை தவிர மற்ற அனைத்தையும் டிஜிட்டல் மூலமே மேற்கொள்ளலாம். கடந்த காலங்களில் ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால் வங்கிக்கு சென்று சில படிவங்களை பூர்த்தி செய்து பணம் அனுப்ப வேண்டும். இதற்கு மிகுந்த காலதாமதம் ஆகும். ஆனால் தற்போது நெட் பேங்கிங், யூபிஐ வசதிகள் மூலம் நினைத்த நேரத்தில் நினைத்த நபர்களுக்கு உடனடியாக பணத்தை அனுப்பி விட முடியும்.

அதே நேரத்தில் யுபிஐ வந்துவிட்ட பிறகு பணம் புழக்கம் மக்களிடையே வெகுவாக குறைந்து இருக்கிறது. டீக்கடைகள் தொடங்கி மிகப்பெரிய நிறுவனங்கள் வரை டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கிறது. அந்த வகையில் மத்திய அரசும் மக்களிடையே டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது வரை டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. ஆனாலும் சிலர் இன்னும் ஏடிஎம்களின் பணத்தை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு முறை வகையில் அவர்களுக்கு பயனுள்ளதாகவும் சுலபமாகவும் இருப்பதாக கருதுகிறார்கள்.
இந்த நிலையில் அதற்கு கட்டுப்பாடு இருக்கும் வகையில் புதிய நடைமுறை இன்று முதல் வர இருக்கிறது. தற்போது வங்கிகளில் பணம் எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஒரு நாளைக்கு 20 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை தங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் எடுத்துக் கொள்ளலாம். பிற வங்கிகளில் அதற்கும் சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. மாதத்தில் ஐந்து முறை வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் இலவசமாகவும், பிற வங்கிகளில் மூன்று முறை கட்டணம் இன்றியும் பணம் எடுத்துக் கொள்ளலாம். சில வங்கிகள் 8 முறை வரை கட்டணமில்லா பணப்பிரிவினை வழங்குகின்றன.
அதற்கு மேல் செல்லும்போது இருபது ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் இதற்கு கட்டண உயர்வு அமலாகிறது. அதாவது ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின் படி பெருநகரங்களில் (மெட்ரோ) மாதம் 3 இலவச பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம். பெருநகரம் இல்லாத பகுதிகளில் (நான்-மெட்ரோ) மாதம் 5 இலவச பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியும்.
இது பணம் எடுப்பது மற்றும் பேலன்ஸ் செக், மினி ஸ்டேட்மென்ட், பின் மாற்றம் போன்ற நிதி அல்லாத பரிவர்த்தனை ஆகியவற்றுக்கு ஒட்டுமொத்தமாக பொருந்தும் என்பதால், இந்த இலவச எல்லையை மீறினால் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் 23 ரூபாய் + வரிகளோடு வசூலிக்கப்படும்.
எனவே, வாடிக்கையாளர்கள் பெருநகரங்களில் மற்ற வங்கி ஏடிஎம்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். ஒரு வேளை கட்டண உச்சவரம்பு இலவச எல்லையை மீறினால், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.23 மற்றும் வரிகளுடன் சேர்த்து 25 ரூபாய்க்கு மேல் கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications