Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டுக்கு கிடைத்த மெகா முதலீடு... சீனாவுக்கு ரூ.11,250 கோடி போச்சு! ஆப்பிள் வைத்த செக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகெங்கும் ஐபோன்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆப்பிள் நிறுவனமும் அதற்கேற்ப புதிய புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. இதற்கிடையே ஐபோன்களை உற்பத்தி செய்யும் ஆப்பிளின் காண்டிராக்டர் நிறுவனம் எடுத்துள்ள முக்கிய முடிவால் தமிழகத்திற்குப் பெரிய முதலீடு கிடைத்துள்ளது. இது பொருளாதாரத்திற்கு மிக பெரிய பூஸ்டாகவே இருக்கும்.

உலகெங்கும் அதிகம் விற்பனை செய்யப்படும் செல்போன்களில் ஒன்று ஆப்பிள் ஐபோன். ஆப்பிள் நிறுவனம் மற்ற செல்போன்களை போல ஆண்டுக்கு பல செல்போன்களை வெளியிடாது. எப்போதும் செப்டம்பர் மாதம் மட்டும ஐபோன்கள் வெளியிடப்படும். அந்த ஐபோன்களை வாங்க மக்களிடையே மிக பெரிய போட்டியே இருக்கும்.

Bad news for China as India gets mega investment from Apple supplier foxconn

மாறிய பிளான்

கடந்த பல ஆண்டுகளாகவே ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை சீனாவில் தான் உற்பத்தி செய்து வந்தது. சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்கள் உலகெங்கும் விற்பனை செய்யப்படும். ஆனால், கொரோனா சமயத்தில் சீனாவில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. மற்ற நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், சீனாவில் பல காலம் முழு ஊரடங்கு இருந்தது. இதனால் விநியோக சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டது.

அப்போது தான் சீனாவுக்கு வெளியேயும் வலுவான உற்பத்தி பேஸ் தேவை என்பதை ஆப்பிள் நிறுவனம் உணர்ந்தது. அதைத் தொடர்ந்து ஐபோன்களை உற்பத்தி செய்யும் பாக்ஸ்கான் நிறுவனம் சீனாவுக்கு வெளியே தொழிற்சாலைகளை அமைக்கத் தொடங்கின. இந்தியாவில், அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் ஆலை அமைந்தது. தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் சில ஆண்டுகளாகவே ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

மெகா முதலீடு

இதற்கிடையே தமிழ்நாட்டில் ஆலையை விரிவாக்கம் செய்ய சுமார் 1.5 பில்லியன் டாலரை பாகஸ்கான் முதலீடு செய்துள்ளது.. அதாவது இது இந்திய மதிப்பில் ரூ.12,800 கோடியாகும். இது தொடர்பான தகவல்களைப் பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ளதாகவும் தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த முதலீடு ஸ்ரீபெரும்புதூர் ஆலையை விரிவாக்கம் செய்து உற்பத்தியை அதிகரிக்க உதவும். இருப்பினும், பாக்ஸ்கானின் திட்டம் என்ன என்பது குறித்துக் கூடுதல் தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை.

அதிகரிக்கும் ஐபோன் உற்பத்தி

பாக்ஸ்கான் நிறுவனம் கடந்த காலங்களில் சீனாவிலேயே பெரிய முதலீடுகளைச் செய்து வந்தது. ஆனால், கொரோனா சமயத்தில் ஏற்பட்ட சிக்கலே அதன் திட்டத்தை மாற்றி அமைக்க வைத்திருக்கிறது. இதன் காரணமாகவே சீனாவுக்குப் போகும் முதலீடு இப்போது நமக்கு கிடைத்துள்ளது. இது நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாகவே இருக்கும். இந்தியாவில் ஐபோன் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், 2026 இறுதிக்குள் அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற நிலை உருவாகும் எனத் தெரிகிறது.

ஆப்பிள் திட்டம்

ஆப்பிள் நிறுவனம் பொதுவாக எந்தவொரு ஐபோன்களையும் நேரடியாகத் தயாரிக்காது. பாக்ஸ்கான், பெகாட்ரான், விஸ்ட்ரான் போன்ற நிறுவனங்களிடம் கண்டிராக்ட் கொடுத்துவிடும். அந்த நிறுவனங்கள் ஐபோன்களை உற்பத்தி செய்து ஆப்பிளுக்கு வழங்கும். கடந்த காலங்களில் சீனாவில் தான் பெரிய உற்பத்தி ஆலைகளைச் செயல்பட்டு வந்த நிலையில், இப்போது இந்தியா, வியட்நாமிலும் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த மெகா முதலீடு கிடைத்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவில் புதிய தொழிற்சாலைகளைக் கட்ட வேண்டாம் என்றும் அமெரிக்காவிலேயே ஐபோன்களை உற்பத்தி செய்யுமாறும் ஆப்பிள் சிஇஓ டிம் குக்கிடம் கூறியிருந்தார். ஆனால், அதையும் தாண்டி இந்த முதலீடு வந்துள்ளது. இது ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தியை அதிகரிக்க எந்தளவுக்குத் திட்டமிட்டுள்ளது என்பதையே காட்டுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+