ஊதிய உயர்வு கோரி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'
சென்னை: ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் உள்ள பொதுத் துறை வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள பொதுத் துறை வங்கி ஊழியர்கள் தங்களின் ஊதியத்தை 25 சதவீதம் உயர்த்தித் தர வேண்டும் என்று தொடர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இருப்பினும் அவர்களின் ஊதியம் உயர்த்தப்படவில்லை.
இதையடுத்து நாடு தழுவிய அளவில் நவம்பர் 12ம் தேதி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்தனர்.

பேச்சுவார்த்தை
இந்தியன் வங்கிகள் சங்கத்திற்கும், வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்புக்கும் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

ஊதியம்
வங்கி ஊழியர்கள் 25 சதவீத ஊதிய உயர்வை கேட்டனர். பின்னர் பேச்சுவார்த்தையின்போது 23 சதவீதம் கேட்டனர். ஆனால் இந்திய வங்கிகள் சங்கம் 11 சதவீத உயர்வு மட்டுமே அளிக்க முடியும் என்று தெரிவித்துவிட்டது.

வேலைநிறுத்தம்
தங்களின் ஊதியத்தை உயர்த்திக் கொடுக்கக் கோரி நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிப்பு
பொதுத் துறை வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் செக் கிளியர் செய்வது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படும்.

முன்பும் கூட
ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி பொதுத் துறை வங்கி ஊழியர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து பொதுத் துறை வங்கி ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படாமல் உள்ளது.

வங்கிகள்
நாட்டில் 27 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. அவற்றில் 8 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் கிளைகளின் எண்ணிக்கை 50 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை
இன்றைய வேலைநிறுத்தத்தையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் 350 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. 2 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தனியார் வங்கிகள்
பொதுத் துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து வரும் இந்நாளில் தனியார் வங்கிகள் வழக்கம்போல் செயல்படுகின்றன.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications