For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பண பரிவர்த்தனைகள் பாதிக்கப் படும் அபாயம்

Google Oneindia Tamil News

சென்னை: சம்பள திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

சம்பள திருத்தத்தை மேற்கொள்வது, வங்கித் துறை சீர்த்திருத்தங்களை நிறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வங்கி ஊழியர்களின் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் அவர்களின் கோரிக்கைகள் குறித்து வங்கி ஊழியர்களின் சங்கங்களுக்கும், வங்கி அமைப்புகளுக்கும் இடையே கடந்த சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

Bank employees to strike work today

பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாததால் தோல்வி அடைந்தது. இதையடுத்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18ம் தேதி (இன்று) நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த வங்கி ஊழியர்கள் சங்கங்கள் முடிவு செய்தன.

அதன்படி, இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் 10 லட்சம் ஊழியர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இந்த வேலை நிறுத்தத்தால் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் பண பரிவர்த்தனைகள் பாதிக்கப் படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Nearly Rs 20,000 crore business transactions through the branches of 28 nationalized banks falling under the districts of Srikakulam, Vizianagaram and Visakhapatnam will be interrupted on Wednesday as the bank staff have decided to go on a one-day strike from 10 am to protest against the government's apathy towards addressing their demands of salary hike and withdrawal of proposed reforms in the banking sector in favour of foreign banks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X