வங்கி ஊழியர் பேச்சுவார்த்தை தோல்வி: நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்
டெல்லி: மத்திய அரசுடன் வங்கி ஊழியர்கள் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து திட்டமிட்டபடி நாளை நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு, வாரத்துக்கு 5 நாட்கள் பணி, ஓய்வூதியத்தை மாற்றியமைத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. கோரிக்கைகள் ஏற்கப்படாததை அடுத்து திட்டமிட்டபடி வரும் 12-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் கூறியதாவது:
வங்கி ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலையில் நாங்கள் நிர்வாகத் துடன் 14-வது முறையாக பேச்சு வார்த்தை நடத்தினோம். அதில் தோல்வியே ஏற்பட்டது.
பின்னர், மாலையில் மத்திய அரசின் தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையர் பி.பி.மித்ராவுடன் பேச்சு நடத்தினோம். அதிலும், உடன்பாடு ஏற்படவில்லை. 11 சதவீதம் வரையில் ஊதிய உயர்வு அளிக்கவே ஒப்புக் கொண்டனர். இதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
எனவே, திட்டமிட்டபடி, வரும் 12-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளோம். இதில், பொதுத்துறை, தனியார், அயல்நாட்டு வங்கிகளைச் சேர்ந்த மொத்தம் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதனால் பணிப் பரிமாற்றம், காசோலை பரிமாற்றம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கணக்குகள், பங்குச் சந்தை வியாபார கணக்கும் பாதிக்கும் என்று அவர் கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications