Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு - டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் விலை உயர வாய்ப்பு

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதால், வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்களின் விலையை உயர்த்த சோனி, பேனசோனிக், கோத்ரெஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.70.40 ஆகக் குறைந்தது. இது இந்தியாவின் பல்வேறு துறைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு உபயோகப் பொருட்களாக டிவி, ப்ரிட்ஜ், வாஷிங்மெசின் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது.

சோனி, பேனசோனிக், கோத்ரெஜ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், ரூபாய் மதிப்பு சரிவு காரணமாகத் தங்களது உற்பத்திப் பொருட்களின் விலையை உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளன.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்ததால் இறக்குமதி மதிப்பு அதிகமாகும். கச்சா எண்ணெய் போன்ற சில இறக்குமதிகளை தடுத்து நிறுத்த முடியாது. அதிக மதிப்புக்கு இறக்குமதி செய்வது நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகப்படுத்தும். மேலும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் விலையும் அதிகமாகும்

பாதிப்பு எதனால்

பாதிப்பு எதனால்

அமெரிக்காவின் டிரம்ப் அரசு துருக்கி நாட்டிலிருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியப் பொருள்கள் மீதான வரியையும் அதிகப்படுத்தியதன் காரணமாக துருக்கியின் நாணயமான லிராவின் மதிப்பு கடுமையாகச் சரிந்துள்ளது. டாலருக்கு நிகரான லிராவின் மதிப்பு சரிந்தது. லிராவின் மதிப்பு சரிவைக் கண்டுள்ளதால் உலக அளவில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூபாய் மதிப்பு சரிவு

ரூபாய் மதிப்பு சரிவு

அதுமட்டுமல்லாமல் சர்வதேச கரன்சிகளை விற்பதில் ரிசர்வ் வங்கியின் தலையீடு, பாதுகாப்பான முதலீட்டுக்கு ஏற்பட்ட போட்டித்தன்மை போன்ற காரணங்களாலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவு ஏற்பட்டுள்ளது. 2018 ஆண்டு தொடக்கத்திலிருந்து ரூபாய் மதிப்பு 9 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 69.93 ஆக சரிந்தது. அதன் பிறகு தற்போது மீண்டும் மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளது.

வீட்டு உபயோகப் பொருட்கள்

வீட்டு உபயோகப் பொருட்கள்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.70.40 ஆகக் குறைந்தது. இது இந்தியாவின் பல்வேறு துறைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன. எனவே, அதன் தாக்கத்தைச் சீராக்க பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு அந்நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

உற்பத்தி செலவு அதிகரிப்பு

உற்பத்தி செலவு அதிகரிப்பு

சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி, பொங்கல் என வருகிற பண்டிகைக் காலங்களில் மக்கள் அதிக விலை கொடுத்து மின் சாதனப் பொருட்களை வாங்க வேண்டியிருக்கும். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கோத்ரெஜ் அப்ளையன்சஸ் நிறுவனத்தின் தொழில் பிரிவுத் தலைவரான வி.பி.கமல் நந்தி, "ரூபாயின் மதிப்பு 70க்கு மேல் தாண்டும்போது எங்களுக்கான உற்பத்திச் செலவு அதிகரித்து பல்வேறு நெருக்கடிகள் ஏற்படுகின்றன. இதே நிலை நீடித்தால் எங்களது பொருட்களுக்கான விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை. பண்டிகை தினங்களுக்கு முன்பாக ஆகஸ்ட் மாத இறுதியில் விலைகள் உயர்த்தப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

மின்சாதன பொருட்கள் உயரும்

மின்சாதன பொருட்கள் உயரும்

அதேபோல, பேனசோனிக் நிறுவனமும் ரூபாய் மதிப்பு சரிவால் பொருட்களின் விலையை உயர்த்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதாக அதன் தெற்காசியப் பிரிவின் தலைமைச் செயலதிகாரியான மணிஷ் சர்மா தெரிவித்துள்ளார். சென்ற மாதத்தில் பல்வேறு மின்சாதன விற்பனை நிறுவனங்கள் 32 இன்ச் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவு திரை கொண்ட தொலைக்காட்சிகளின் விலையை உயர்த்தியிருந்தன. இந்நிலையில், இதர பொருட்களின் விலையும் விரைவில் உயர்த்தப்படலாம் என்பதால் மக்கள் இந்த ஆண்டு பண்டிகை நாட்களில் அதிகம் செலவிட வேண்டியிருக்கும் என்றே கூறப்படுகிறது.

நடப்பு கணக்கு பற்றாக்குறை

நடப்பு கணக்கு பற்றாக்குறை

ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு நிலையில் உள்ளது. இந்த ஆண்டு மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 9 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையிலான இடைவெளி கடந்த ஜூலை மாதம் ரூ. 1,26,612 கோடியாக அதிகரித்தது. இந்த இடைவெளி நடப்பு கணக்கு பற்றாக்குறையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் ஏற்றுமதியாளர்களுக்கும், உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கும் ரூபாய் மதிப்பு சரிவு பலனை அளிக்கும். ஏனெனில், இறக்குமதியாளர்களும் எண்ணெய் உற்பத்தியாளர்களும் அமெரிக்க டாலர்களையே பயன்படுத்துகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+