Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளி இல்லை! "இந்த" உலோகம் தான் அடுத்த தங்கம்! அடித்து சொல்லும் பிரபல தொழிலதிபர்! ஆஹா நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டு வரும் சூழலில், பலரும் வெள்ளியில் முதலீடு செய்யலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறார்கள். இதற்கிடையே பிரபல தொழிலதிபர் ஒருவர் எந்த உலோகம் அடுத்த தங்கமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டிரம்ப்பின் நடவடிக்கைகளும் புவிசார் அரசியல் சூழல்களுமே தங்கம் விலை அதிகரிக்கப் பிரதானக் காரணமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக டிரம்ப்பின் ரெசிப்ரோக்கல் வரி அறிவிப்பிற்குப் பிறகு உச்சம் தொட்ட தங்கம் விலை, குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Copper is the New Gold Industrilist Sees Big Opportunity in Copper Industry

தங்கம் விலை

இடையில் கடந்த 3 நாட்களாக உயராமல் இருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்தது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.9015க்கு விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் விலை ரூ.9 ஆயிரத்தைத் தாண்டுவது இதுவே முதல்முறையாகும். அதேபோல ஒரு சவரன் இப்போது ரூ.560 உயர்ந்து, ரூ.72,120ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல 24 கேரட் தங்கமும் ரூ.10 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இப்போது சென்னையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9835க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை இப்படித் தொடர்ந்து உச்சம் தொடுவதால் மக்கள் பலராலும் அதை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெள்ளியில் முதலீடு செய்வது குறித்து யோசித்து வருகிறார்கள்.

வெள்ளி

அதற்கேற்றார் போல வெள்ளி விலையுமே கூட கடந்த சில காலமாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.111க்கு, அதாவது கிலோ ரூ.1.11 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெள்ளியை வாங்கலாமா.. அது அடுத்த தங்கமாக இருக்குமா என்பது குறித்து பலரும் யோசித்து வருகிறார்கள். இதற்கிடையே பிரபலத் தொழிலதிபர் ஒருவர் காப்பர் அதாவது தாமிரமே அடுத்த தங்கமாக இருக்கும் எனச் சொல்கிறார்.

காப்பர் தான்

வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் தான் இந்தக் கருத்துகளைக் கூறியிருக்கிறார். தாமிரத்தின் மதிப்பும் தேவையும் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்ட அனில் அகர்வால், அதை அடுத்த தங்கம் என்று குறிப்பிட்டார். உலகின் மிகப் பெரிய தங்க உற்பத்தியாளர்களில் ஒருவரான பாரிக் கோல்ட் என்ற நிறுவனம் "பாரிக்" என்று தனது பெயரை மாற்றியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அனில் அகர்வால், இதுவே தாமிரத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாகக் கூறியிருக்கிறார். தாமிரம், மின்சார வாகனங்கள், ஏஐ எனப் பல துறைகளில் காப்பரின் தேவைகள் அதிகரித்து வருவதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copper is the New Gold Industrilist Sees Big Opportunity in Copper Industry

என்ன சொல்கிறார்

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "உலகின் இரண்டாவது பெரிய தங்க உற்பத்தியாளரான பாரிக் கோல்ட் தனது பெயரை பாரிக் என்று மட்டும் மாற்றிக் கொண்டுள்ளது.. ஏனென்றால் எதிர்காலம் தாமிரம் தான் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். தாமிரம் என்பது புதிய சூப்பர் உலோகம். மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்கட்டமைப்பு, ஏஐ, பாதுகாப்பு உபகரணங்கள் என அனைத்து மேம்பட்ட தொழில்நுட்பங்களிலும் தாமிரம் தான் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

உலகளவில் தாமிரச் சுரங்கங்கள் புத்துயிர் பெறுகின்றன.. புதிய உருக்காலைகளை உருவாக்குகின்றன. இந்தியாவுக்கு இந்த முக்கியமான உலோகத்தை உற்பத்தி செய்வதில் மிகப் பெரிய வாய்ப்பு இருக்கிறது. இளம் தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இது இருக்கிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அதிகரிக்கும் காப்பர் தேவை

அனில் அகர்வால் குறிப்பிட்டது போலவே உண்மையில் தாமிரத்தின் தேவை அதிகரித்தே வருகிறது. நவீனத் தொழில்நுட்பங்களில் தாமிரத்திற்கான தேவை அதிகரிப்பதே இதற்குப் பிரதானக் காரணமாகும். உலகெங்கும் இதனால் தாமிரத்தை உற்பத்தி செய்யப் பல்வேறு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பலரும் தாமிர ஆலைகளில் பெரிய முதலீடும் செய்து வருகிறார்கள்.

இந்தச் சூழலில் கனடா நாட்டை சேர்ந்த பாரிக் கோல்ட் நிறுவனம் தனது பெயரை பாரிக் என்று மாற்றியுள்ளது. நிறுவனத்தின் மாறி வரும் உற்பத்தித் திட்டத்தைக் கருத்தில் கொண்டே பெயர் மாற்றம் செய்யப்படுவதாக பாரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் காலத்தில் தாமிரத்தின் உற்பத்தியை அதிகரிக்க பாரிக் திட்டமிட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே பாகிஸ்தானில் ரெக்கோ டிக் என்ற மிகப் பெரிய காப்பர் திட்டத்தை உருவாக்கி வருகிறார்கள். அதேபோல ஜாம்பியாவிலும் வானாவிலும் தாமிர ஆலையை விரிவாக்கம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+