டீசல் விலை மீண்டும் 50 பைசா உயர்வு: மானியமற்ற சிலிண்டர் விலை குறைப்பு!
சென்னை: டீசல் விலை மீண்டும் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மானியமில்லாத சிலிண்டர் விலை 102 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
டீசல் விற்பனையால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்யும் வகையில், மாதந்தோறும் 50 காசுகள் வரை விலையை உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், டீசல் விலை உயர்வு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வரிகள் தவிர லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது சென்னையில் டீசல் லிட்டருக்கு ரூ.57.95க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று நள்ளிரவு விலை உயர்வு அமலுக்கு வரும்போது, லிட்டருக்கு 61 காசுகள் அதிகரித்து ரூ.58.56க்கு விற்பனை செய்யப்படும்.
இதேபோல் டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.53.34ல் இருந்து ரூ.54.91 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.58.91ல் இருந்து ரூ.59.50 ஆகவும், மும்பையில் ரூ.62.60ல் இருந்து ரூ.63.23 ஆகவும் விற்பனை செய்யப்படும்.
அதே நேரத்தில் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சிலிண்டர் விலை குறைப்பு
ஆனால், மானியமில்லாத சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மானியமில்லாத சிலிண்டர் விலை 1,234 ரூபாயில் இருந்து 1,132 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் மானியமில்லாத சிலிண்டர் விலை 102 ரூபாய் குறைந்துள்ளது.
-
இந்தியாவிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு கேஸ் சிலிண்டர் இருப்பு உள்ளது? எப்படி சமாளிக்கலாம்? -
வழக்கத்தை விட 30% கூடுதலாக எல்பிஜி உற்பத்தி.. சிலிண்டர் தட்டுப்பாடு வராது! மத்திய அரசு விளக்கம்! -
தமிழகத்தில் முதல்முறை! கேஸ் சிலிண்டர் பதுக்கிய 2 பேர்.. குண்டர் பாய்ந்தது! அதிரடி கைது! -
கிராமங்களில் சிலிண்டர் புக்கிங் புதிய ரூல்ஸ்.. 3 நாளில் சிலிண்டர் வரும்.. அறிய வேண்டிய பெரிய மாற்றம் -
சென்னையில் சிலிண்டர் புக்கிங் தோல்வி.. காஸ் ஏஜென்சிகளை முற்றுகையிடும் மக்கள்.. என்ன நடக்கிறது? -
LPG சிலிண்டரில் CNG கேஸை நிரப்பும் மக்கள்! ஆபத்து! சிலிண்டர் வெடிக்கும் அபாயம்! வார்னிங்! -
பெட்ரோல், டீசல், LPG தட்டுப்பாடு இல்லை.. நாடாளுமன்றத்தில் அடித்து சொன்ன மத்திய அமைச்சர்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications