பெட்ரோல் விலையைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.3 உயருகிறது!
டெல்லி: டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகலாம்.
டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை உயர்த்த வேண்டும் என்று பெட்ரோலிய அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதுபோல மண்எண்ணை விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்த வேண்டும் என்றும், சமையல் கியாஸ் விலையை சிலிண்டருக்கு ரூ.50 அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
எனவே இவற்றின் விலையை உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் ஒரு பேரல் பெட்ரோல் நேற்று அமெரிக்க டாலரில் 114.44-ல் இருந்து 117.40 டாலராக உயர்ந்தது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு ரூ.1,63 காசுகள் அதிகரித்தது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால் இழப்பை சரிகட்ட பெட்ரோல் விலை உயர்வு நள்ளிரவே அமலுக்கு வந்தது.
கச்சா எண்ணை விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவுக்கு சென்று விட்டது. இதனால் டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணை ஆகியவற்றின் விலையை கண்டிப்பாக உயர்த்தியே தீரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சர்வதேச விலை அளவுடன் சமன் செய்வதற்காக, கடந்த ஜனவரி மாதம் முதல் டீசல் விலை மாதம்தோறும் 50 காசுகள் உயர்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications