வெள்ளி விலை 2 லட்சத்திற்கு கீழ் குறைகிறதா..? நிபுணர்கள் அடித்து சொல்லும் முக்கிய விஷயம்!
சென்னை: MCX சந்தையில் வெள்ளி விலை சமீப காலத்தில் ஈரான் போர், பணவீக்கம் அச்சம், பத்திர முதலீடு அதிகரிப்பு, டாலர் மதிப்பு உயர்வு ஆகிய காரணத்தால் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. ஒரு கட்டத்தில் ஒரு கிலோ ரூ.4,39,337 என்ற வரலாற்று உச்சத்தை எட்டிய வெள்ளி, தற்போது சுமார் ரூ.2,06,737 வரை குறைந்து, மொத்தத்தில் 47% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்த திடீர் சரிவு, கடந்த ஆண்டின் வரலாற்று விலை உயர்வுக்குப் பிறகு முதலீட்டாளர்கள் திட்டமிட்டு லாபத்தை பெறுவதற்காக விற்பனை செய்து வெளியேறியதன் விளைவாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஈரான் போர் பதற்றம்
புனித வெள்ளி காரணமாக ஏப்ரல் 3ஆம் தேதி இந்திய, அமெரிக்க சந்தைகள் விடுமுறை. இந்த நிலையில் ஏப்ரல் 2ஆம் தேதி வெள்ளி விலையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சிக்கு உலகளாவிய அரசியல் பதற்றம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் தொடர்பான கடுமையான எச்சரிக்கை வெளியிட்ட பின்னர் சர்வதேச சந்தைகளில் அதிகமான தடுமாற்றம் ஏற்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளுக்கு மாறாமல், பணத்தை வெளியே எடுத்தனர்.
MCX மற்றும் சர்வதேச சந்தையில் வீழ்ச்சி
இந்திய எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி பியூச்சர்ஸ் விலை 4.48% சரிந்தது. குறிப்பாக மே 5 முடியும் ஒப்பந்தத்தில் 7.8% வரை வீழ்ச்சி ஏற்பட்டு ரூ.2,24,500 என்ற குறைந்த நிலையை எட்டியது. இதேவேளையில் ஏப்ரல் 2ஆம் தேதியில் வர்த்தகத்தில் அதிகப்படியாக ரூ.2,42,800 வரை உயர்ந்திருந்தாலும் இன்டராநேட வர்த்தகத்தில் அதிகப்படியான தடுமாற்றம் இருந்தது.
சர்வதேச சந்தையிலும் இதே நிலை காணப்பட்டது. சரிவதேச ஸ்பாட் சந்தையில் வெள்ளி விலை 5.49 டாலர் குறைந்து, ஒரு அவுன்ஸ் 69.57 டாலராக சரிந்தது. இது 7.32% வீழ்ச்சியாகும்.
டாலர் பலம்
வெள்ளி விலை குறைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று அமெரிக்க டாலர் தொடர்ந்து வலுப்பெறுவது தான். பொதுவாக டாலர் மதிப்பு உயரும் போது தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையும், தற்போதைய மேக்ரோஎக்னாமிக் சூழ்நிலையில், முதலீட்டாளர்கள் டாலருக்கு மாறுவதால் வெள்ளி விலைகள் சரிந்து வருகிறது. இந்த நிலையில் வெள்ளி 2 லட்சம் ரூபாய்க்கு கீழ் குறையுமா..?
நிபுணர்கள் கணிப்பு
இண்டஸ்இந்த் நிறுவனத்தின் ஆய்வாளர் ஜிகர் திரிவேதி கூறுகையில் எம்சிஎக்ஸ் வெள்ளி பியூச்சர்ஸ் விலை ரூ.2,20,000 வரை சரிய வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறார். அதனால், விலை உயரும்போது விற்பனை செய்யும் உக்தி (sell on rallies) முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என பரிந்துரைக்கிறார்.
மேலும் சாம்கோ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் அபூர்வா ஷெத் கூறுவதாவது, 2026 ஜனவரியில் உச்சத்தை எட்டிய பின்னர் வெள்ளி விலை ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையிலான பரந்த வரம்பில் (range) இயங்கிக் கொண்டிருக்கிறது. இது consolidation கட்டத்தை காட்டுகிறது என கூறுகிறார்.
தற்போதைய சூழ்நிலையில் வெள்ளி விலை 2 லட்சத்திற்கு கீழ் குறைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு, ஆனால் போர் பதற்றம் அதிகமானால், கச்சா எண்ணெய் விலை 110 டாலர் அளவீட்டை கடந்து டாலர் வலுப்பெற்றால் மட்டுமே 2 லட்சம் அளவீட்டிற்கு கீழ் வரும் என நிபுணர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் Vs வெள்ளி
தங்கத்தை காட்டிலும் வெள்ளி சந்தையில் தற்போது ஏற்ற இறக்கம் மற்றும் நிலையற்ற தன்மை நிறைந்தாக உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் வெள்ளியில் முதலீடு செய்யும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட வேகமான உயர்வுக்குப் பிறகு, தற்போதைய சரிவு ஒரு இயல்பான திருத்தமாகக் பார்க்கப்படுகிறது. இருப்பினும், குறுகிய காலத்தில் விலை பாதிப்பு நீடிக்கும் வாய்ப்பு உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்ப வேண்டும்.
உஷார் மக்களே
வெள்ளிக்கு செயற்கையான டிமாண்ட் உருவாகியிருக்கும் காரணத்தால் உயர்ந்தாலும் சரி, குறைந்தாலும் சரி தங்கத்தை விட கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகமான தாக்கத்தை வெள்ளி எதிர்கொண்டு வருகிறது. இதனால் வெள்ளியில் முதலீடு செய்யும் மக்கள் மிகுந்த எச்சரிக்கை உடன் செயல்பட வேண்டும். எனவே முதலீட்டாளர்கள் உணர்ச்சி அடிப்படையில் முடிவெடுக்காமல், சந்தை நிலவரத்தை கவனித்து செயல்படுவது மிகவும் அவசியமாகிறது.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications