"தங்கம் 15% சரிவு.." எதிர்பாராத வகையில் நடந்த மாற்றம்.. இதற்கு உண்மையில் என்ன காரணம்! மேஜர் தகவல்
சென்னை: சர்வதேச அளவில் நிகழும் பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மிடில் கிளாஸ் மக்களால் கூட அவ்வளவு சீக்கிரம் தங்கத்தை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தங்கம் தொடர்பாக மிக முக்கியமான ஒரு அப்டேட் வந்துள்ளது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த சில ஆண்டுகள், அதாவது கொரோனாவுக்கு முன்பு தங்கம் விலை எந்தளவுக்கு இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது நமது நாட்டில் 24 கேரட் தங்கம் விலையே ஒரு கிராம் ரூ.3500 என்ற ரேஞ்சில் தான் இருந்தது. கொரோனா பரவல் வெடித்த பிறகு ஏற தொடங்கிய தங்கம் விலை அதன் பிறகு குறையவே இல்லை.

தங்கம் விலை உயர்வு
முதல் சில ஆண்டுகள் தங்கம் விலை அலை அலையாகத் தாக்கிய கொரோனாவால் உயர்ந்தது. அதன் பிறகு உக்ரைன் ரஷ்யா மோதல், அதன் பிறகு இஸ்ரேல் போர் என்று காரணங்கள் வரிசை கட்டிக் கொண்டே இருந்தது. இதில் கடைசியாக வந்து சேர்ந்தது டிரம்ப்.. அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற சமயத்தில் தங்கம் கொஞ்சம் விலை குறைந்தது.
இருப்பினும், அதன் பிறகு தங்கம் விலை மீண்டும் பறக்கத் தொடங்கிவிட்டது. அதிலும் குறிப்பாக டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தவுடன் தங்கம் உச்சத்திற்குச் சென்றது. அவர் ரெசிப்ரோக்கல் வரியை நிறுத்திவைப்பதாக அறிவித்தாலும் சீனா உடனான வர்த்தக போரைத் தொடர்ந்தார். இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தே வந்தது. இடையில் சில நாட்கள் குறைந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது தங்கம் விலை அதிகமாகவே இருக்கிறது.
தங்கம் விலை
நேற்றைய தினம் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது.. சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.240 உயர்ந்து ரூ.72,360க்கு விற்பனையானது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.9,045க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையே தங்கம் தொடர்பாக முக்கியமான ஒரு டேட்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது இது குறித்து நாம் பார்க்கலாம்.
15% சரிவு
இந்த ஆண்டு ஜனவரி- மார்ச் காலாண்டில் கடந்தாண்டு உடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் தங்கத் தேவை 15 சதவீதம் குறைந்து 118.1 டன்னாக இருக்கிறது. விலை உயர்ந்ததால் தங்கத்தின் அளவு குறைந்தாலும் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 22% அதிகரித்து ₹94,030 கோடியாக உயர்ந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
மக்கள் தயக்கம்
நடப்பாண்டில் இந்தியாவின் தங்கத் தேவை 700-800 டன்னாக இருக்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. இந்தாண்டில் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளது. இப்போது 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ஒரு லட்ச ரூபாயை நெருங்கி வருகிறது. தங்கம் இந்தளவுக்கு உச்சத்திற்குப் போவதால் மக்களை அதை வாங்கவே தயக்கம் காட்டி வருகிறார்கள்.
இது தொடர்பாக உலக தங்க கவுன்சிலின் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சச்சின் ஜெயின் கூறுகையில், "விலை உயர்வால் தங்கத்தை மக்கள் வாங்குவது குறைந்துள்ளது. இருப்பினும், நமது நாட்டில் கலாச்சார ரீதியாகத் தங்கம் முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. மேலும், திருமண சீசனும் தொடங்குவதால் தங்கம் தேவை அதிகரிக்கலாம்" என்றார்.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
ரூ.15.15 லட்சம் கோடி எங்கே? பங்குச்சந்தையை உலுக்கிய 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்' மோசடி.. என்ன நடந்தது?! -
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications