"தங்கம் விலை 30% சரியும்! அதுவும் அடுத்த ஒரே ஆண்டில்" மிக தெளிவாக விளக்கிய பிரபல பொருளாதார வல்லுநர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மக்களால் தங்கத்தை எளிதாக வாங்கவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அடுத்த ஓராண்டிற்குள் தங்கம் விலை 30% வரை குறைய வாய்ப்பிருப்பதாகப் பிரபல பொருளாதார வல்லுநர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதற்கான காரணத்தையும் அவர் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

இந்தியாவில் கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனாவுக்கு முன்பு வரை ஆபரணத் தங்கம் ரூ.3500 என்ற ரேஞ்சிலேயே இருந்தது. ஆனால், அதன் பிறகு உயரத் தொடங்கிய தங்கம் விலை அதன் பிறகே குறையவில்லை. முதலில் கொரோனா அலை அலையாகத் தாக்கிய நிலையில், தங்கம் விலையும் அலை அலையாகப் பறந்தது.

Gold personal finance

தங்கம் விலை

அதன் பிறகு பொருளாதார சிக்கல், ரஷ்யா உக்ரைன் மோதல், இஸ்ரேல் ஹமாஸ் போர், டிரம்ப் காரணமாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இடையில் அதிபர் டிரம்ப் வென்ற சமயத்தில் உள்ளிட்ட சில நேரம் மட்டுமே தங்கம் விலை குறைந்தது. மற்றபடி தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. குறிப்பாக டிரம்ப் கடந்த மாத தொடக்கத்தில் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தபோது தங்கம் விலை புதிய உச்சம் தொட்டது.

தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்கள் தங்கம் விலை கொஞ்சம் சீராகினாலும் பெரியளவில் குறையவில்லை. கடந்த மே 24ம் தேதி ஆபரணத் தங்கம் கிராமுக்குச் சென்னையில் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.8,990க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடர்ந்தது. இதற்கிடையே தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ராஜேஷ் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

லாஜிக் இதுதான்

இது தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ராஜேஷ் தனது ட்விட்டரில், "இப்படி தங்கம் விலை ஏறிக்கிட்டே போச்சுன்னா.. அதன் லிக்விடிட்டி (ஈலியாக அதை விற்பது) குறையும். ஏன்னா நிறைய பேரால அதை வாங்க முடியாது. டிமாண்டு குறையும். லிக்விடிட்டி போச்சுன்னா, சந்தையில தங்கம் தேங்க ஆரம்பிக்கும். தேங்க ஆரம்பிச்சா, சப்ளை அதிகமாகும்.

30% குறையும்

டிமாண்டு குறைந்து, சப்ளை அதிகமானா, விலை குறையும். விலை குறையுதேன்னு இன்னும் நிறைய பேர் பயந்து போய் விற்பார்கள் ( panic selling/profit booking) பண்ணுவாங்க. அப்போது, இன்னும் கூட விலை குறையும். அடுத்த ஒரு வருஷத்துக்குள்ள தோராயமா 30% வரை விலை குறைய வாய்ப்பிருக்குன்னு நினைக்கிறேன். அப்படி விலை குறைஞ்சா, நீங்களும் பயந்து போய் விற்க வேண்டாம். கூடுதலா வாங்கி வைங்க. இதத்தான் சொல்ல வந்தேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

மக்களே ரெடியா

அதாவது தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தால் மக்களால் அதை வாங்க முடியாது.. இதனால் அதை எளிதாக விற்கும் வாய்ப்பு குறையும். இதனால் டிமாண்டு குறைந்து.. சப்ளையும் குறையும் என்றும் இதனால் தங்கம் விலையும் குறையும் என அவர் பதிவிட்டிருக்கிறார். இப்படி அடுத்த ஓராண்டுக்குள் தங்கம் விலை 30% வரை குறைய வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+