ஏடிஎம் சேவையில் 100% அந்நிய நேரடி முதலீடு - மத்திய அரசு முடிவு

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஏடிஎம் இயந்திரங்களை பராமரிப்பது மற்றும் அவற்றில் பணம் நிரப்புவது உள்ளிட்ட சேவைத்துறைகளில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

ஏடிஎம் இயந்திரங்களை பாதுகாப்பது, பணம் நிரப்புவது உள்ளிட்ட பணிகளுக்கு தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. இவற்றில் சர்வதேச நிறுவனங்களையும் ஈடுபடுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Govt May Soon Allow 100 Fdi In Cash Atm Management Companies

இதையடுத்து 100% அந்நிய நேரடி முதலீட்டு யோசனை நிதியமைச்சகத்தின் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன்பேரிலேயே, இந்த 100% அந்நிய நேரடி முதலீட்டு யோசனையை நிதியமைச்சகம் முன்வைத்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக, உள்துறை அமைச்சகத்திடம் பாதுகாப்பு தணிக்கைச் சான்றிதழ் கோரப்பட்டுள்ளதாகவும், உள்துறை அமைச்சகம் அனுமதி தரும்பட்சத்தில், மத்திய அமைச்சரவை இதற்கான ஒப்புதலை வழங்கும் எனவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, ஏடிஎம் பணம் நிரப்பும் சேவையில், எஸ்ஐஎஸ், சிஎம்எஸ், செக்யூர் வேல்யூ, லாஜிகேஷ் உள்ளிட்ட சில நிறுவனங்களே ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Government of India is likely to allow 100 per cent foreign direct investment (FDI) in cash and ATM management companies, since they are not required to comply with the Private Securities Agencies Regulations Act.
Please Wait while comments are loading...