ஜிஎஸ்டி வரி அறிமுக ஆண்டிலேயே அமர்க்களம் - ரூ. 7.19 லட்சம் கோடி வசூல்
சென்ற 2017-18 நிதியாண்டில் மத்திய அரசு ஜிஎஸ்டியின் கீழ் மொத்தம் ரூ.7.19 லட்சம் கோடி வசூல் செய்துள்ளது.
சென்னை: ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் வரையிலும் மாதாந்திர சராசரியாக சுமார் 89,885 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக ஜிஎஸ்டி ஆணையம் தெரிவித்துள்ளது.
வாட் வரி விதிப்பு முறையில் ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் மாநிலங்களின் வசதிக்கும் வருவாய்க்கும் ஏற்ற மாதிரி வரி விகிதங்களை அமல்படுத்திக்கொண்டன. மாநிலங்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப வரி விகிதங்களை அமல்படுத்திக் கொண்டதால் பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறி, அவை மக்களின் தலையில் சுமையாக இறங்கியது. இதனால் பணவீக்க விகிதமும் ஏற்ற இறக்கமாகவே இருந்து வந்தது.

பல முனை வரிமுறைகளை ஒழித்துவிட்டு அதற்கு மாற்றாக ஒரே தேசம் ஒரே வரி முறை (One Nation, One Tax) என்ற முழுக்கத்துடன் ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது.
ஜிஎஸ்டி வரி முறையில் 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு விதமான வரி விகிதங்கள் அமல்படுத்தன. அதைத் தொடர்ந்த மாதங்களில் வரி வசூல் விவரங்கள் வெளியிடப்பட்டு வந்தன. முதல் மாதத்திலேயே 95,000 கோடி வசூல் செய்யப்பட்டது. ஆகஸ்டு மாதத்திற்கான ஜிஎஸ்டி வரியாக சுமார் 90,669 கோடி ரூபாய் வசூலானதாக தெரிவித்தது.
செப்டம்பர் மாதத்தின் வரி வசூல் சுமார் 92,150 கோடி ரூபாயை எட்டியது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் வரி வசூல் அதிகரித்து வந்த நிலையில் வரி மாதம் ஜிஎஸ்டி வரி ரூ.86,318 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
இதனிடையே 2017-18 நிதியாண்டுக்கான மொத்த வரி வசூல் விவரத்தை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. 2017 ஆகஸ்ட் முதல் 2018 மார்ச் வரையில் மொத்தம் ரூ. 7.19 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் மத்திய ஜிஎஸ்டியாக ரூ.1.19 லட்சம் கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.1.72 லட்சம் கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.3.66 லட்சம் கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த எட்டு மாதங்களில் சராசரி மாதாந்திர வசூல் ரூ.89,885 கோடியாகும். 2017 ஜூலை மாத வசூல் உட்பட 2017-18-ம் நிதியாண்டுக்கான மொத்த ஜிஎஸ்டி வரி வசூல், தற்காலிகமாக ரூ.7.41 லட்சம் கோடியாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டின் எட்டு மாதக் காலத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த இழப்பீடு ரூ.41,147 கோடியாகும். இது 2015-16ஆம் ஆண்டின் வரிவசூலின் அடிப்படையில் மாநிலங்களின் வருவாய் 14 சதவிகித அளவில் பாதுகாக்கப்பட வேண்டிய வகையில் வழங்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications