ஜிஎஸ்டி வரி செலுத்துவது இனி ஈஸி... சட்ட விதிகள் எளிமையாகிறது - அருண் ஜெட்லி
ஜிஎஸ்டி சட்ட விதிகளில் மாற்றம் கொண்டுவரப்போவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
டெல்லி: ஜிஎஸ்டி வரி வருவாயை பெருக்கும் வகையில், கிராமப்புற மக்களும் மிகவும் எளிதாக புரிந்து கொண்டு ஜிஎஸ்டி வரி செலுத்தும் வகையில் ஜிஎஸ்டி சட்ட விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.
ஒன் இந்தியா ஒன் டேக்ஸ் என்ற முழக்கத்துடன், ஒரே நாடு ஒரே வரி விகிதம் என்ற கொள்கையை முன்னெடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி வரி விகிதம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
ஆரம்பத்தில் பெரும்பாலான பொருட்களுக்கு உச்சபட்ச வரியான 28 சதவிகிதம் அமல்படுத்தப்பட்டது. பின்னர், வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரின் கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு மாதமும் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அதிக பட்ச வரி விதிப்பில் இருந்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு குறைந்த பட்ச வரிவிகிதம் அமல்படுத்தப்பட்டது.

ஜிஎஸ்டி படிவம் தாக்கல்
ஜிஎஸ்டி வரி விகிதம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அதற்கான சட்ட விதிகளும், கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப்பயன்பாடு மற்றும் நிகர வரி போன்றவற்றை தாக்கல் செய்வதற்கான படிவங்கள் கடந்த ஆகஸ்டு மாத இறுதியில்தான் ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயினும், இதற்கான படிவங்கள் அனைத்தும் வர்த்தகர்களுக்கும் தொழில்துறையினருக்கும் முற்றிலும் புதிதாக இருந்ததால் இவற்றை புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்பட்டது.

வரி செலுத்த ஆர்வம்
கொள்முதல் , உள்ளீட்டு வரிப்பயன்பாடு, விற்பனை மற்றும் நிகர வரியை ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய குறைவான காலக்கெடு விதிக்கப்பட்டதால், அனைத்து தரப்பினரும் ஒரே சமயத்தில் முந்திக்கொண்டு முயற்சி செய்ததால் ஜிஎஸ்டிஎன் இணையதளம் முடங்கியது. கூடவே தொழில்நுட்ப கோளாறும் ஏற்பட்டதால் ஜிஎஸ்டிஎன் இணையதளம் முற்றிலும் செயலிழந்தது.

சட்ட விதிகள் எளிமையாகிறது
ஜிஎஸ்டிஎன் ஆணையமும் நிலைமையை உணர்ந்துகொண்டு படிவங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்தது. மேலும், ஜிஎஸ்டி சட்ட விதிகளை அனைத்து தரப்பினரும், குறிப்பாக கிராமப் புறத்தில் உள்ளவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான முறையில் மாற்றி அமைக்கும் முயற்சியை மேற்கொண்டது. இதற்காக ஜிஎஸ்டி சட்ட விதிகளை எளிமைப்படுத்தும்படி சட்ட வல்லுநர்களை கேட்டுக்கொண்டது.

வரி செலுத்துவது ஈஸி
ஜிஎஸ்டி சட்ட விதிகளை எளிமைப்படுத்தி மாதிரி திட்ட அறிக்கையை கடந்த ஜனவரி மாதத்திற்குள் சமர்பிக்குமாறு சட்ட வல்லுநர்களை அறிவுறுத்தியது. அவர்களும் மாதிரி வரைவு திட்ட அறிக்கையை ஜஎஸ்டிஎன் ஆணையத்திற்கு அளித்துவிட்டனர். இந்த வரைவு திட்டமானது சிற்சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு முழுவடிவம் கொடுக்கப்பட்டு வரும் 27ம் தேதி நடக்கவிருக்கும் 26வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதலுக்கு சமர்பிக்கப்படும். ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒப்புதலுக்கு பின்பு இவை அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

எளிய முறையில் வரி
அனைத்து தரப்பினரின் கோரிக்கை மற்றும் பரிந்துரைகளை ஏற்று ஜிஎஸ்டி ஆணையம் வர்த்தகர்கள் மற்றம் தொழில்துறையினரும் எளிய முறையில் வரி செலுத்தும் வகையில் கொள்முதல் முதல் விற்பனை வரையில் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய படிவத்தை தாக்கல் செய்யும் வகையில் மிக எளிய திட்டத்தை செயல்படுத்தும் என்று கர்நாடக ஜிஎஸ்டி ஆணைய கமிஷனர் எம்.வினோத் குமார் தெரிவித்தார்.

சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனம்
தற்போது இந்தியாவில் மூன்றரை கோடிக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் சரிபாதி அளவிலான தொழில்நிறுவனங்கள் கிராமப்புறத்தில்தான் உள்ளன. இவற்றில் சுமார் எட்டு கோடிக்கும் மேற்பட்டவர்கள் உற்பத்தி பிரிவில் பணிபுரிகின்றனர். சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களின் முந்தைய மாதத்திற்கான படிவங்களை நடப்பு மாதத்தில் 20ம் தேதிக்குள்ளும், மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களின் வரிப் படிவங்களை நடப்பு மாதத்தில் 8ம் தேதிக்குள்ளும் சமர்பிக்கும் வகையில் உள்ளது.

வரி வருவாய் அதிகரிப்பு
இனி மாதம் மூன்று முறை கணக்கு தாக்கல் செய்வதற்கு பதிலாக மாதம் ஒருமுறை கணக்கு தாக்கல் செய்யும் திட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். இதன் மூலம் மத்திய அரசுக்கு வரி எளிதில் வசூலாகும்.
நடப்பு நிதி ஆண்டின் வரி வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மிகப்பெரிய தொழில்நிறுவனங்கள் வரும் மார்ச் மாதத்திய வரிப் படிவங்களை மார்ச் மாத இறுதிக்குள் தாக்கல் செய்யும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications