HCL: டான்ஸ் ஆடுனது எல்லாம் ஓகே.. சம்பளம் உயர்வு எப்போ கிடைக்கும்?
HCL டெக்னாலஜீஸ் தனது 50-வது ஆண்டு நிறைவை மிகப் பிரமாண்டமாகக் நொய்டா கேம்பஸில் கொண்டாடியது. இந்த முக்கியமான நிகழ்ச்சியில் ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் நீண்ட காலத்திற்கு பின் பொதுவெளியில் வந்தார். வயது காரணமாக சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி இந்த முக்கிய நிகழ்வில் பங்கேற்றார்.
இவருடன் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் ரோஷ்னி நாடார் கலந்துக்கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக அமைந்தது இந்நிறுவனத்தின் சிஇஓ டான்ஸ் தான். ஹெச்சிஎல் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநரான சி.விஜயகுமார் மேடைக்கு வந்தவுடன் ஊழியர்களின் கைதட்டி உற்சாகப்படுத்தினர். பின்னர் அவரே தானாகவே நடனமாடத் தொடங்கினார். அந்தக் காட்சி ஊழியர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டமாக மாறியது.

பொதுவாக இந்திய சிஇஓக்கள் ஊழியர்கள் மத்தியில் டான்ஸ் ஆடுவது என்பது மிகவும் அரிதான விஷயம், மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்களில் இது மிகவும் எளிதான விஷயமாக இருந்தாலும் இந்தியாவில் மிகவும் அரிதானு. இந்த பிம்பத்தை உடைத்தற்காக விஜயகுமார் அவர்களை பாராட்டலாம்.
ஆனால் அந்தக் கொண்டாட்டத்தின் ஒரு வீடியோ சமூக ஊடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. HCL ஊழியர் பிரஜ்வல் படியா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இந்த வீடியோ 1.5 லட்சம் பார்வைகளைத் தாண்டியுள்ளது.
இந்த வீடியோவில் விஜயகுமார் மேடைக்கு நடந்து வரும் போது கையசைத்தார். அப்போது பார்வையாளர்கள் வரிசையில் இருந்து ஒரு ஊழியர் "சார், அப்பிரைசல் எப்போ?" என உரக்கக் கேட்டார். அந்தக் கேள்வியைக் கேட்ட உடன் அருகில் இருந்த சக ஊழியர்கள் சிரித்தனர். ஊழியர் கேட்ட கேள்வி விஜயகுமார் அவர்களுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை என்றாலும், வீடியோ இணையத்தில் பெரிய அளவில் டிரெண்டாகியுள்ளது.
சம்பள உயர்வு அறிவிப்பு
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் கடைசியாக அக்டோபர் 2025ல் சராசரியாக 7 சதவீத சம்பள உயர்வு அறிவித்துள்ளது. சிறந்த செயல்திறன் கொண்ட ஊழியர்களுக்கு 12 முதல் 15 சதவீதம் வரை உயர்வு வழங்கப்படும் என அறிவித்தது.
இந்த சம்பள உயர்வுக்கு முன்பு சுமார் இரண்டு நிதியாண்டுகளாக E3 மற்றும் அதற்கு மேல் உள்ள நடுத்தர மற்றும் மூத்த மேலாண்மை ஊழியர்களுக்கு (E4 பேண்ட் மற்றும் அதற்கு மேல்) சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்ற பிரச்சனை இருந்தது. இந்த 2 வருட காலக்கட்டத்தில் E0 முதல் E2 பேண்ட் வரையிலான இளம் ஊழியர்களுக்கு 1 முதல் 4 சதவீதம் வரையிலான சிறிய சம்பள உயர்வு அளிக்கப்பட்டது.
சிஇஓ சம்பளம்
இதே வேளையில் சிஇஏ சி.விஜயகுமாருக்கு 2026ஆம் நிதியாண்டில் 71 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளது. அவரது வருமானம் ரூ.154 கோடியாக உயர்ந்தது. இது 2025ஆம் ஆண்டில் ரூ.95 கோடி சம்பளத்தை காட்டிலும் அதிகம்.
HCL டெக் 50-வது ஆண்டு கொண்டாட்டம் உற்சாகத்துடன் தொடங்கியிருந்தாலும், ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்த கேள்வி நிறுவனத்தின் சில விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அடுத்த சில நாட்களில் ஹெச்சிஎல் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications