இன்போசிஸ்-க்கு ஷாக் கொடுத்த HCL.. ஏஐ நிறுவனத்தில் ரூ.1500 கோடி கொட்டும் ரோஷினி நாடார்..!
இந்தியாவில் எந்தொரு நிறுவனமும் பெற்றிடாத ஒரு வாய்ப்பு இன்போசிஸ்-க்கு வந்தது, ஆனால் சற்றும் மதிப்பிடாமல் தவறவிட்டது. விஷால் சிக்கா இன்போசிஸ் சிஇஓ-வாக இருக்கும் போது ஓப்பன்ஏஐ நிறுவனத்தில் நேரடியாக முதலீடு செய்யும் வாய்ப்பை இன்போசிஸ் பெற்றது, ஆனால் இன்போசிஸ் உயர்மட்ட நிர்வாகம் சேவை துறை வர்த்தகத்தில் கவனம் செலுத்தலாம் என முடிவு செய்த காரணத்தால் இந்த மாபெரும் வாய்ப்பை தவறவிட்டது.
இதை பாடமாக எடுத்துக்கொண்டு, ரோஷினி நாடார் தலைமையிலான ஹெச்சிஎல் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு முழு ஏஐ நிறுவனத்தில் முதலீடு செய்ய களமிறங்கியுள்ளது.

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான முதலீடுகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான HCLTech மிகப்பெரிய AI முதலீட்டுக்கு தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட Sarvam AI நிறுவனத்தில் சுமார் 150 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,450 கோடி வரை HCLTech முதலீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், Sarvam AI இந்த முதலீட்டு சுற்றில் சுமார் 300 மில்லியன் டாலர், அதாவது ரூ.2,850 கோடி அளவிற்கு முதலீட்டை திரட்ட திட்டமிட்டு இருக்கும் வேளையில், ஹெச்சிஎல் இதில் பெரும் பகுதி வகிக்கிறது. இந்த முதலீடு நிறைவேற்றப்பட்டால், இந்தியாவின் AI துறையில் மிகப்பெரிய முதலீட்டு ஒப்பந்தங்களில் ஒன்றாக இது மாறும்.
Sarvam AI ரொம்ப ஸ்பெஷல்
உலகளவில் செயற்கை நுண்ணறிவு துறையை தற்போது ஓப்பன்ஏஐ, கூகுள், ஆந்திரோபிக், போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டுப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவிற்கான சொந்த AI மாடல்களை உருவாக்கும் முயற்சியில் Sarvam AI முக்கிய நிறுவனமாக உருவெடுத்து வருகிறது.
இத்துறையில் Sarvam AI மட்டும் அல்லாமல், உரையாடல் அடிப்படையிலான AI சேவைகளை வழங்கும் Gnani.ai மற்றும் IIT-பம்பே தலைமையிலான BharatGen நிறுவனமும் இந்தியாவின் சொந்த அடிப்படை AI மாடல்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்திய மொழிகள், இந்திய பயனாளர்கள் மற்றும் இந்திய அரசுத் தேவைகளுக்கேற்ற AI அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த 3 நிறுவனங்களும் முயற்சி செய்து வருகின்றன.
இந்திய அரசின் Sovereign AI திட்டம்
இந்திய அரசு "IndiaAI Mission" என்ற திட்டத்தின் மூலம் நாட்டின் AI திறனை வலுப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்காக மத்திய அரசு சுமார் ரூ.10,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இந்தியாவின் சொந்த AI அடிப்படை மாடல்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் நிதியியல் நீதியான ஆதரவு வழங்கப்படுகிறது.
இதுவரை GPU உள்கட்டமைப்பு மற்றும் AI கணினி திறன் மேம்பாட்டிற்காக சுமார் ரூ.111 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் Sarvam AI இந்தியாவின் Sovereign AI முயற்சியில் முக்கிய நிறுவனமாக பார்க்கப்படுகிறது.
யார் யார் முதலீடு செய்கிறார்கள்?
வெளியாகியுள்ள தகவல்களின் படி, HCLTech சுமார் 150 மில்லியன் டாலர் முதலீடு செய்யும். அதேபோல் உலகப் புகழ்பெற்ற முதலீட்டு நிறுவனமான Bessemer Venture Partners சுமார் 50 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் என்று கூறப்படுகிறது.
மீதமுள்ள தொகையை Nvidia, Prosperity7, Activate, Glade Brook உள்ளிட்ட முதலீட்டு நிறுவனங்களிடமிருந்து வர வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே Sarvam AI-யில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களும் இந்த புதிய சுற்றில் பங்கேற்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய IT நிறுவனங்களுக்கு புதிய சவால்
இந்த முதலீட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், இந்திய IT சேவை நிறுவனங்கள் AI துறையில் நேரடி முதலீடு செய்யும் அரிதான நிகழ்வாக இது பார்க்கப்படும். ஏனெனில், இந்தியாவின் பெரிய ஐடி சேவை நிறுவனங்கள் பல ஆண்டுகளாக புதிய தொழில்நுட்பங்களில் தீவிரமான முதலீடு செய்யாமல் இருந்ததாக விமர்சனங்கள் இருந்து வந்தன.
குறிப்பாக AI, ஜெனரேட்டிவ் AI, தானியங்கி மென்பொருள் உருவாக்கம் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில், பல IT நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை விட பைபேர் மற்றும் டிவிடெண்ட் வழங்குதலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கடும் விமர்சனம் உள்ளது.
இத்தகைய நிலையில் தான் ஹெச்சிஎல் சர்வம் ஏஐ நிறுவனத்தில் முதலீடு செய்து தனது பலத்தை காட்ட துவங்கியுள்ளது.
IT துறை பங்குகள் சரிவு
கடந்த சில வாரங்களாக இந்திய IT பங்குகள் பங்குச்சந்தையில் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், Anthropic, OpenAI நிறுவனங்கள் ஐடி சேவை - கன்சல்டிங் சேவை பிரிவில் இறங்குவதாக வந்த அறிவிப்பு ஒட்டுமொத்த ஏஐ துறையை புரட்டிப்போட்டு உள்ளது.
ஏற்கனவே Anthropic, OpenAI மாடல்கள் கோடிங் எழுதும் பணிகளையும், ப்ராடெக்ட் பணிகளையும் நொடிகளில் செய்து வரும் வேளையில், பல்வேறு சேவைகளுக்கான மாடியூல்களையும் தனித்தனியாக உருவாக்கியிருக்கும் வேளையில், ஒரு நிறுவனத்திற்காக கஸ்டமைஸ்டு சேவை வழங்குவதில் மிகவும் எளிது என்பதால்.
ஐடி சேவை - கன்சல்டிங் சேவை வழங்குவதற்காக தனித்தனி நிறுவனங்களை உருவாக்கியது.












Click it and Unblock the Notifications