Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்கள் வங்கி கணக்கில் இந்த 10 பரிவர்த்தனைகள் நடந்தால்.. வருமான வரித்துறை நோட்டீஸ் வீடு தேடி வரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை நம் இஷ்டத்திற்கு செலவு செய்யலாம்" என்று நீங்கள் நினைத்தால், அது கொஞ்சம் ஆபத்தானது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு பெரிய பரிவர்த்தனையையும் பின்னால் இருந்து கவனித்துக் கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் உங்களின் ஒவ்வொரு பெரிய பரிவர்த்தனையையும் கண்காணிக்கிறது என்கிறார்கள் பொருளதார நிபுணர்கள்.

இன்றைய டிஜிட்டல் காலத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு ரூபாய் பரிமாற்றமும் வருமான வரித்துறையின் ரேடாரில் கண்காணிக்கப்படுகிறது. "என் கணக்கு, என் பணம்" என்று நாம் நினைத்தாலும், குறிப்பிட்ட வரம்பைத் தாண்டும்போது வங்கிகள் தானாகவே அந்தத் தகவலை வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கும் மென்பொருள்களை வங்கிகள் போட்டு வைத்துள்ளன.

If these 10 transactions happen in your bank account an Income Tax notice will come to your house

எனவே சமீபகாலமாக, பலருக்கும் வருமான வரித்துறையிடமிருந்து 'நோட்டீஸ்' வருவதற்குக் காரணம், அவர்கள் அறியாமல் செய்த சில பணப் பரிவர்த்தனைகள்தான். அப்படி வருமான வரித்துறையின் பார்வையில் விழும் 'டாப் 10' பரிவர்த்தனைகள் பற்றி பொருளாதார நிபுணர்கள் கூறிய தகவல்களை பார்க்கலாம்.


1 சேமிப்புக் கணக்கில் 10 லட்சம்

ஒரு வருடத்தில் ₹10 லட்சத்திற்கு மேல் உங்கள் கணக்கில் டெபாசிட் செய்தால், வங்கி உடனே அந்த விபரத்தை மேலிடத்திற்குத் தெரிவித்துவிடும்.

2 நடப்புக் கணக்கில் 50 லட்சம்

வியாபாரம் செய்பவர்கள் ₹50 லட்சத்திற்கு மேல் பணப் பரிமாற்றம் செய்தால் அது நேரடியாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

3 நிலையான வைப்பு தொகை 10 லட்சம்

ஒரே நேரத்தில் ₹10 லட்சத்திற்கு மேல் எஃப்டி போடுபவர்கள், அந்தப் பணத்திற்கான ஆதாரத்தைச் சொல்லத் தயாராக இருக்க வேண்டும்.

4 கிரெடிட் கார்டு பில்

ஒரு லட்சத்திற்கு மேல் ரொக்கமாகவோ அல்லது 10 லட்சத்திற்கு மேல் ஆன்லைன் மூலமாகவோ கிரெடிட் கார்டு பில் கட்டினால், வருமான வரித்துறை உங்கள் கதவைத் தட்டும் வாய்ப்பு அதிகம்.

5 ரியல் எஸ்டேட்

30 லட்சத்திற்கு மேல் சொத்து வாங்கினாலோ அல்லது விற்றாலோ, அந்தப் பதிவுத் தகவல் வரித்துறைக்குச் சென்றுவிடும். இதில் குறிப்பிட வேண்டிய ஒரு விளக்கம் உள்ளது. பலர் கடன் வாங்கி தான் சொத்து வாங்குவார்கள். அவர்கள் வருமான வரி கட்டத் தேவையில்லை, மாறாக அவர்கள் வருமான வரிச் சலுகை பெற முடியும். ஆனால், ஏன் அவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புகிறது என்றால், நீங்கள் ₹50 லட்சத்திற்கு வீடு வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வரித்துறை பார்ப்பது இதுதான்:
வீட்டின் மதிப்பு: ₹50 லட்சம்.
வங்கி கடன்): ₹40 லட்சம்.

உங்கள் கைக்காசு : ₹10 லட்சம்.

பதிவு கட்டணம் : ₹5 லட்சம்.

இங்கே, நீங்கள் செலுத்திய அந்த ₹15 லட்சம் (10+5) பணம் எங்கிருந்து வந்தது? அது உங்கள் சம்பளப் பணமா? அல்லது கணக்கில் காட்டப்படாத பணமா? என்பதைத்தான் அவர்கள் செக் செய்வார்கள். நீங்கள் முறையாக வங்கி மூலம் கடன் வாங்கியிருந்தால், அந்த கடன் ஆவணம் தான் உங்கள் மிகப்பெரிய ஆதாரம். உங்கள் வருமான வரித் தாக்கலில் "எனக்கு இவ்வளவு கடன் இருக்கிறது" என்று காட்டிவிட்டால், வரித்துறை உங்களை எதுவும் செய்யாது.

6 பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்

ஷேர் மார்க்கெட்டில் 10 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்வது உங்களைக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரும்.

7 வெளிநாட்டுப் பயணம்

நீங்கள் ஒரு வருடத்தில் 10 லட்சத்திற்கு மேல் வெளிநாட்டுப் பயணங்களுக்காகவோ அல்லது பணப் பரிமாற்றத்திற்காகவோ செலவு செய்தால், அது 'ஆடம்பரச் செலவு' கணக்கில் வந்துவிடும்.

8 பெரிய ரொக்கப் பரிமாற்றம்

எந்தவொரு தனிநபரிடமிருந்தும் ஒரே நாளில் ₹2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாகப் பெறுவது சட்டப்படி குற்றம். வருமான வரிச் சட்டம் பிரிவு 269ST (Section 269ST) படி இது மிகக் கடுமையான குற்றமாகும். எந்தவொரு தனிநபரும் மற்றொரு நபரிடமிருந்து ஒரே நாளில், ஒரே பரிவர்த்தனைக்காக ₹2 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக வாங்கக்கூடாது. ஒரு நபரிடம் இருந்து பலமுறை பிரித்து வாங்கினாலும், மொத்தத் தொகை ₹2 லட்சத்தைத் தாண்டினால் அது குற்றம்.

ஒரு பொருளை விற்று (உதாரணத்திற்கு கார் அல்லது நகை), அதற்கான பணத்தை வெவ்வேறு நாட்களில் வாங்கினாலும் அது ₹2 லட்சத்தைத் தாண்டினால் குற்றம் ஆகும். நீங்கள் யாரிடமாவது ₹2 லட்சம் ரொக்கமாக வாங்கினால், அந்த முழுத் தொகையும் (₹2 லட்சமுமே) அபராதமாக விதிக்கப்படும். அதாவது, வாங்கிய பணத்தை அப்படியே அரசாங்கத்திற்குக் கட்ட வேண்டி வரும்.


9 உறவினர் அல்லாதவர்களிடம் வாங்கும் பரிசு

உங்கள் இரத்த உறவு அல்லாத ஒருவரிடம் இருந்து ஒரு ஆண்டில் ₹50,000-க்கு மேல் 'கிப்ட்' வாங்கினால், அதற்கு நீங்கள் வரி கட்ட வேண்டும். இதுவும் வரித்துறையின் கண்காணிப்பில் உள்ளது.

10 பான் கார்டு மற்றும் ஐடி ரிட்டர்ன்ஸ்

வங்கி டெபாசிட் மற்றும் செலவுகளுக்கும், நீங்கள் தாக்கல் செய்யும் வருமான வரி அறிக்கையில் காட்டிய வருமானத்திற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருந்தால், வருமான வரித்துறை உங்கள் கதவைத் தட்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+