அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்
பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தை பற்றி சமூக வலைதளங்களில் "அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி" என்று ஒரு தகவல்கள் பரவியது. வெறும் மிகைப்படுத்தப்பட்ட தகவலாக இருக்கும். அதெல்லாம் வதந்தி என்று நினைத்து கடந்த போகலாம் என்றே தோன்றியது. எனினும் உண்மை நிலவரம் அறியலாம் என்று பேக்ட்டுகளை பார்த்தால்.. அது ஓரளவுக்கு உண்மைதான் என்பது தெரியவந்தது. முதலிலேயே சொல்லிவிடுகிறேன். பங்குச்சந்தை முதலீடு என்பது அபாயங்களுக்கு உட்பட்டது. நீங்களாக சொந்தமாக முடிவெடுங்கள்.. அல்லது செபியிடம் அனுமதி பெற்ற பங்குசந்தை நிபுணரிடம் ஆலோசனை பெறுங்கள்.
2010ல் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவன பங்கில் வெறும் 10 ஆயிரம் இதில் முதலீடு செய்திருந்தால் எப்படி 2026ல் ஒரு கோடி கிடைத்திருக்கும்... இதில் சில முக்கியமான கணக்கீடுகள் உள்ளன. அதைத் தெளிவாகப் பார்ப்போம்.

கணக்கீடு காலம்: 2010 - 2026
2010-ல் பங்கின் விலை: 2010-ம் ஆண்டு தொடக்கத்தில் பஜாஜ் ஃபைனான்ஸ் ஒரு பங்கின் விலை சுமார் ₹35 முதல் ₹40 வரை இருந்தது.
முதலீடு: நீங்கள் ₹10,000 முதலீடு செய்திருந்தால், உங்களுக்கு சுமார் 250 பங்குகள் கிடைத்திருக்கும்.
போனஸ் மற்றும் ஸ்ப்ளிட் : 2016-ல் இந்த நிறுவனம் பங்குகளைப் பிரித்தது (Stock Split 1:5) மற்றும் போனஸ் (Bonus 1:1) வழங்கியது.இதன் விளைவாக, உங்களிடம் இருந்த 250 பங்குகள் 2,500 பங்குகளாக மாறியிருக்கும். இன்றைய விலை (2026 நிலவரப்படி) தற்போது ஒரு பங்கின் விலை சுமார் ₹7,000 முதல் ₹7,500 வரை வர்த்தகம் ஆகிறது என்று வைத்துக்கொண்டால் 2500 பங்குகளை ₹7,000 என்று பெருக்கினால் ₹1,75,00,000 (1 கோடியே 75 லட்சம்) கிடைத்திருக்கும்ட
கூட்டு வட்டி : பஜாஜ் ஃபைனான்ஸ் கடந்த 15 ஆண்டுகளில் ஆண்டுக்குச் சராசரியாக 40% முதல் 50% வரை வளர்ச்சியை கொடுத்துள்ளது.
துறை வளர்ச்சி: இந்தியாவில் கடன் வாங்கும் கலாச்சாரம் மற்றும் நுகர்வோர் சந்தை பெருகியதால், இந்த நிறுவனம் அசுர வளர்ச்சி அடைந்தது.
நிதர்சனம் என்ன? இந்தக் கதையை உங்களுக்கு கேட்கும் போது மிக எளிதாக இருந்தாலும், இதில் இரண்டு சவால்கள் உள்ளன.
ஒன்று பொறுமை: 2010-ல் இருந்து 2026 வரை (16 ஆண்டுகள்) இடையில் பங்குச் சந்தை பலமுறை வீழ்ந்தபோதும் விற்காமல் அந்தப் பங்கை வைத்திருந்திருக்க வேண்டும்.
கண்டுபிடிக்க வேண்டும்: 2010-ல் பஜாஜ் ஃபைனான்ஸ் ஒரு சிறிய நிறுவனமாக இருந்தபோது, இது இவ்வளவு வளரும் என்று கணித்து முதலீடு செய்தவர்கள் மிகச் சிலரே. இதேபோல டைட்டன் , ஈச்சர் மோட்டார்ஸ் போன்ற சில நிறுவனங்களும் முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக்கி உள்ளன.
ஈச்சர் மோட்டார்ஸ் ராயல் என்பீல்டு புரட்சி
ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனம் 2000-களின் தொடக்கத்தில் ஒரு சாதாரண நிறுவனமாக இருந்தது. ராயல் என்பீல்டு பைக்குகளின் மறுவருகைதான் இதன் வெற்றிக்கு முக்கிய காரணம். இளைஞர்கள் மத்தியில் புல்லட் பைக்குகளுக்கு ஏற்பட்ட மோகத்தை இந்த நிறுவனம் சரியாகப் பயன்படுத்திக்கொண்டது. மற்ற நிறுவனங்கள் 10 பைக்குகள் விற்று எடுக்கும் லாபத்தை, ஈச்சர் மோட்டார்ஸ் ஒரு 'கிளாசிக் 350' பைக்கை விற்று எடுத்தது. 2009-ல் சுமார் ₹7 (Adjusted Price) ஆக இருந்த ஒரு பங்கின் விலை, இன்று சுமார் ₹4,500-க்கு மேல் வர்த்தகமாகிறது. அதாவது சுமார் 600 மடங்கு வளர்ச்சி. அன்று ஒரு லட்சம் போட்டிருந்தால் இன்று 6 கோடி ரூபாய் கிடைத்திருக்கும்.
டைட்டன் நிறுவனம்: டாடா குழுமத்தின் தங்கம்
டைட்டன் நிறுவனம் வெறும் கடிகாரங்களை மட்டும் விற்காமல், நகைத்துறையில் ("தனிஷ்க்") கால் பதித்ததுதான் அதன் அசுர வளர்ச்சிக்குக் காரணம். இந்தியாவில் அமைப்புசாரா துறையாக இருந்த நகை விற்பனையை, "தனிஷ்க்" (Tanishq) மூலம் ஒரு பிராண்டாக மாற்றி மக்களின் நம்பிக்கையைப் பெற்றது. கடிகாரங்கள் (Titan, Fastrack), நகைகள் (Tanishq), கண்ணாடிகள் (Titan Eye Plus) என ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பிடித்தது. 2004-ம் ஆண்டு டைட்டன் ஒரு பங்கின் விலை வெறும் ₹3 ஆக இருந்தது. இன்று அது ₹3,000-க்கு மேல் உள்ளது. அதாவது 1000 மடங்கு வளர்ச்சி.
இந் நிறுவனங்கள் முதலீட்டாளர்களைக் கோடீஸ்வரர்களாக்க இந்த 3 உத்திகளே உதவி உள்ளன.
கூட்டு வட்டி முக்கிய காரணம்; பங்குகளின் விலை உயர்ந்தது மட்டுமல்லாமல், இடையில் அவர்கள் வழங்கிய போனஸ் பங்குகள் (Bonus Shares) மற்றும் பங்குப் பிரிப்பு ஆகியவை பங்குகளின் எண்ணிக்கையை ஆயிரக்கணக்கில் உயர்த்தின.
ஈவுத்தொகை : விலை உயர்வைத் தவிர்த்து, இந்த நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கிய 'டிவிடெண்ட்' தொகை மட்டுமே சில முதலீட்டாளர்களுக்கு அவர்களின் ஆரம்ப முதலீட்டை விட அதிகமாக இருந்தது.
நீண்ட காலப் பார்வை புகழ்பெற்ற முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போன்றவர்கள் டைட்டன் பங்கை 20 ஆண்டுகளுக்கு மேலாக விற்காமல் வைத்திருந்தனர். இடையில் சந்தை சரிந்தாலும் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை விடாமல் இருந்ததே அவர்களைக் கோடீஸ்வரர்களாக்கி உள்ளது.
-
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்கா போரில் பிஸி.. சத்தமின்றி சீனா உருவாக்கும் 'தங்கக் கவசம்'.. ஆட்டம் காணும் உலகப் பொருளாதாரம் -
தங்கம் 'டல்'.. 100 ஆண்டுகளில் நடக்காத மிக மோசமான சம்பவம்.. முதலீட்டை எல்லாம் முறியடித்த சரிவு! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?














Click it and Unblock the Notifications