தாம்பரம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்கள் மிகப்பெரிய முடிவு.. நேரடியாக வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்மை காலங்களில் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை எதிர்த்து போராட்டத்தில் இறங்குவது அதிகரித்துள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆத்தணஞ்சேரி சுபஷ்ஸ்ரீ நகரில் குடியிருப்பு கட்டிடத்தில் சட்ட விரோத பார் உடன் இயங்கும் டாஸ்மாக் கடையால் பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர். பலமுறை கடையை அகற்ற மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டும் கிராம மக்கள், மிகப்பெரிய போராட்டம் கையில் எடுப்போம் என்று எச்சரித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடந்து வருகிறது. மதுக்கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. குடித்துவிட்டு மதுபோதையில் அசிங்கமாக பேசுவது, நடுரோட்டில் மது அருந்துவது, பாட்டில்களை வீசி செல்வது, சிறுநீர் கழிப்பது, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்களை வீசுவது என்று சுகாதார கேடு மற்றும் சுற்றுச்சூழல் கேடு மற்றும் மக்களுக்கு அச்சம் போன்ற பிரச்சனைகள் எழுகின்றன.

Public takes a major decision against a TASMAC shop near Tambaram

அதேபோல் அந்த பகுதி மக்களின் வருமானத்தை சுரண்டும் இடமாகவும் டாஸ்மாக் மதுக்கடைகள் இருக்கின்றன. மதுபானத்திற்காக ஏராளமான பணத்தை தினமும் மக்கள் செலவு செய்தால் பல குடும்பங்கள் வறுமையில் தள்ளப்படுகின்றன. பல இளம் பெண்கள் இளம் விதவைகளாக மாற டாஸ்மாக் மதுக்கடைகள் மறைமுகமாக காரணமாக இருக்கின்றன. பலர் குடித்துவிட்டு நோயாளிகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். பலர் குடிப்பதற்காக மட்டுமே வேலைக்கு போகும் மனநிலைக்கு மாறி உள்ளார்கள். மதுபழக்கத்தால் பல குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் போராடுவது அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆத்தணஞ்சேரி சுபஷ்ஸ்ரீ நகரில் குடியிருப்பு கட்டிடத்தில் (4096)கடை எண் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடைக்கு முறையான பார் அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. அங்கு சட்டவிரோதமாக தகரத்தால் அமைக்கப்பட்ட பங்க் கடை வைத்து அதில் பாராக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த டாஸ்மாக் கடையால் அந்த குடியிருப்பு பகுதி முழுவதும் பிளாஸ்டிக் டம்ளர்,ஆங்காங்கே உடைந்த பாட்டில்கள், பெண்கள் நடந்தது செல்லும் போது போதை ஆசாமிகள் சாலையில் சிறு நீர் கழிப்பது போன்ற அருவருக்கதக்க செயல்கள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும் அப்பகுதியை கடந்து செல்லும் மாணவர்கள், பெண்கள் என பொது மக்கள் பலரும் மிகுந்த சிறமத்திற்கு ஆளாகின்றனர்.

இது குறித்து டாஸ்மாக் மேலாளர், மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லையாம். சமீபத்திய தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நிலையில் தமிழகத்தில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் 717 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்தார்.

அதனை டாஸ்மாக் அதிகாரிகள் பல கடைகளை மூடி சீல் வைத்தனர் . ஆனால் படப்பை டாஸ்மாக் கடை மட்டும் மூடப்படவில்லை.. இதையடுத்து தமிழக முதல்வர் நேரடி கவனத்தில் கொண்டு பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பார் அமைத்து செயல்படும் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கூறுகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகமும் கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும்.. இல்லை என்றால் கிராம மக்கள் ஒன்றிணைந்து மிக பெரிய போராட்டத்தை கையில் எடுப்போம் என மக்கள் எச்சரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+