ஐ.பி.எல். போட்டிகளில் ஈடுபட தடை எதிரொலி: இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பங்குகள் பலத்த சரிவு
மும்பை: ஐ.பி.எல். போட்டிகளில் ஈடுபட இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் பங்குச்சந்தையில் அந்நிறுவன பங்குகள் பலத்த சரிவை சந்தித்தன. மும்பை பங்குச் சந்தையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பங்குகள் 5% சரிவு கண்டது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீது குற்றம்சாட்டப்பட்டன. இது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நடத்திய நீதிபதி லோதா தலைமையிலான குழு இன்று ஐ.பி.எல். பிக்ஸிங் விவகாரத்தில் ஈடுபட்டோருக்கான தண்டனை விவரங்களை இன்று அறிவித்தது.

சென்னை, ராஜஸ்தான் அணிகளின் நிர்வாகிகள் குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு கிரிக்கெட் போட்டிகளில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது; சென்னை, ராஜஸ்தான் அணிகள் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட 2 ஆண்டுகாலம் தடை விதிக்கப்பட்டது.
இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கும் 2 ஆண்டுகாலம் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை எதிரொலியால் பங்குச் சந்தைகளில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பலத்த சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனப் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 5% அளவுக்கு சரிவை எதிர்கொண்டது. இதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியிலும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications