நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% அதிகரிக்கும் - சக்தி காந்த தாஸ் நம்பிக்கை
2017 - 18 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதத்தை எட்டும் என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
சென்னை: அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதம் அதிகரிக்கும் என்று பொருளாதார விவகாரத்துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட மத்திய பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருப்பதால் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதம் அதிகரிக்கும் என்று பொருளாதார விவகாரத்துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சக்திகந்த தாஸ், கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டானது பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்று நம்புகிறேன். இதன் காரணமாக அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7% அதிகரிக்கும். அதற்கான அரசாங்கத்தின் பங்களிப்பு குறித்து பட்ஜெட் உரையில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
நிதிப் பற்றாக்குறை இலக்கு 3.2 சதவீதத்தை அடைவது சாத்தியமில்லை என்கிற கருத்தை நிராகரித்த சக்தி காந்த தாஸ், வருமானம் உயர்வதால் 3.2 சதவீத நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்டுவது சாத்தியம்தான் என்று கூறினார்.
பொதுமக்களிடத்தில் மிகையாக இருந்த தொகைகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் வரித்தாக்கல் கணக்கை விட இந்த ஆண்டு வரித்தாக்கல் கணக்கு அதிகரித்துள்ளது. இதனடிப்படையில் பார்க்கும் போது அரசின் வருமானம் அதிகரிக்கும்.
வருமான வரி தாக்கல் செய்யாதபட்சத்தில் கறுப்பு பணத்தை கணக்கில் கொண்டு வருவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள பிரதம மந்திரி கரீப் கல்யான் யோஜனா மூலம் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சில தனிநபர்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்வதில்லை.
வருமான வரித்துறை அவர்களிடமிருந்து வருமானத்தை பெருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அடுத்த ஆண்டில் வருமானம் அதிகரிக்கும் என்றார். ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் வாய்ப்புள்ளது, இதனால் நேரடி வருமானம் 8.8 சதவீத வளர்ச்சி அடையும் என்றும் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications