எல்லாம் நம்மகிட்ட இருந்து பறிச்சதுதான்.. இந்தியன் ஆயில் நிறுவன நிகர லாபம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: இந்தியன் ஆயில் கார்பொரேஷன் நிறுவனம், நடப்பு நிதியாண்டின், மூன்றாம் காலாண்டில் கிட்டத்தட்ட இரட்டிப்பாக லாபம் பார்த்துள்ளதாக அறிவித்துள்ளது.
சென்ற நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 39.95 பில்லியன் ரூபாய் என நிகர லாபம் பெற்றிருந்த இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் லாபம் 97 சதவீதம் உயர்ந்து ரூ.78.83 பில்லியன் லாபம் சம்பாதித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான இந்த காலாண்டின் மொத்த வருவாய் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. 2016-17 நிதியாண்டின் இதே காலகட்டத்தில், 1.16 டிரில்லியன் வருவாய் பெற்ற அந்த நிறுவனம், நடப்பாண்டின் அதே காலகட்டத்தில் 1.32 டிரில்லியன் வருவாய் ஈட்டி சாதித்துள்ளது.
காலாண்டு அறிக்கை வெளியான பிறகு பங்குச் சந்தையில், இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் பங்குகள் 4.40 சதவீதம் உயர்ந்தது.
பெட்ரோல், டீசல் விலையை கடந்த சில மாதங்களாக தினசரி நிர்ணயிக்கும் நடைமுறை வந்துவிட்டது. கடந்த ஏழு மாதங்களில் பழைய விலையுடன் ஒப்பிடும்போது, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7க்கு மேலும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.9ம் உயர்ந்துள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்பொரேஷன் நிகர லாபம் இரு மடங்காகியுள்ளது.
இந்த லாப உயர்வுக்கு வேறு காரணங்களை நிறுவனம் தெரிவித்தபோதிலும், சாமானிய மக்களுக்கு அடிப்படை புரியாமல் இல்லை.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications