லண்டனில் தங்க கக்கூஸ் கட்டி வைத்திருக்கும் விஜய் மல்லையா - எத்தனை கோடி தெரியுமா?
லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் மேன்சனில் தங்கத்தால் ஆன கழிப்பறை இருப்பது தெரியவந்துள்ளது.
லண்டன்: இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடிகள் அளவுக்கு கடன் வாங்கிவிட்டு வெளிநாடு தப்பிச் சென்று விட்ட விஜய் மல்லையா, லண்டனில் தனது வீட்டில் தங்கத்தினால் ஆன கழிப்பறை கட்டி வைத்திருக்கிறாராம்.
வங்கிகளில் கடனாக வாங்கிய கோடிக்கணக்கான ரூபாயை முறையாக திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு பல குற்றவாளிகள் தப்பியோடி விட்டனர். இந்தியாவைச் சேர்ந்த 28 பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான விஜய் மல்லையா இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிகள் அளவுக்கு கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்தில் போய் பதுங்கி விட்டார்.

விஜய் மல்லையா மோசடி
இந்தியாவில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை அமலாக்க துறையினர் கைப்பற்றி வருகிறார்கள். வங்கிகள் அளித்த புகாரின்பேரில் அமலாக்கத் துறை மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அவரை கைது செய்து இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதோடு நீதிமன்றத்திலும் அவர் மீதான வழக்குகள் நடைபெற்று வருகிறது.

ரணகளத்திலும் குதூகலம்
கடன் வாங்கி விட்டு வெளிநாட்டில் போய் பதுங்கியிருந்தாலும் குதூகலமாகவே வாழ்ந்து வருகிறார் விஜய் மல்லையா. பெண் தோழி பிங்கி லால்வானியை விஜய் மல்லையா 3வது திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 62 வயது விஜய் மல்லையாவும், பிங்கி லால்வானியும் கடந்த 3 ஆண்டுகளாக உறவுமுறையில் உள்ளதாக தகவல் வெளியாது.

மல்லையா வீட்டில் தங்க கக்கூஸ்
அதோடு லண்டனில் உள்ள மல்லையாவின் மேன்சனில் தங்கத்தாலான கழிப்பறை இருப்பது தெரியவந்துள்ளது. பிரபல எழுத்தாளரான ஜேம்ஸ் கிராப்ட்ரீ மல்லையா மேன்சனுக்கு சென்ற நிலையில் இதை பார்த்துள்ளார், இந்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார்.

இந்தியர்களின் பணம்
தங்க கழிப்பறையின் சரியான விலை குறித்த விபரம் வெளியாகவில்லை என்றாலும் இதன் விலை கோடிகளில் இருக்கும் என தெரியவந்துள்ளது. என்னதான் தங்க கழிவறையாக இருந்தாலும் சந்தன மணமா வீசப்போகிறது. இந்திய வங்கிகளில் கடன் வாங்கி பணத்தை எல்லாம் எப்படி செலவு செய்கிறார்கள் பாருங்கள் விஜய் மல்லையா.












Click it and Unblock the Notifications