Big 4: எவ்வளவு சொல்லியும் கேட்காத ஊழியர்கள்.. கேபிஎம்ஜி-யில் 100 மூத்த அதிகாரிகள் அதிரடியாக வெளியேற்றம்!
உலகின் முன்னணி தணிக்கை நிறுவனங்களில் ஒன்றான கேபிஎம்ஜி, அமெரிக்காவில் தனது ஆடிட் பிரிவில் சுமார் 100 பார்ட்னர்களை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த பார்ட்னர்களில் சுமார் 10 சதவீதத்துக்கு சமம்.
Big 4 என அழைக்கப்படும் உலகின் முன்னணி ஆடிட்டிங் நிறுவனங்களில் ஒன்றான KPMG, பல ஆண்டுகளாக ஊழியர்களை முன்கூட்டிய ஓய்வு திட்டத்தை தேர்வு செய்ய ஊக்குவிக்கப்பட்ட நிலையில், போதுமான அளவு பார்ட்னர்கள் வெளியேற்றாத காரணத்தால் தற்போது வலுக்கட்டாயமாக பணியில் இருந்து நீக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.

கேபிஎம்ஜி இந்த ஊழியர்கள் குறைப்பை, பார்ட்னர்களின் தனிப்பட்ட செயல்திறன் காரணமாக அல்ல, தற்போதைய ஆடிட் வியாபார அளவுக்கு ஏற்ப பார்ட்னர் எண்ணிக்கையை சரிசெய்யும் பகுதியாகவே இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது. பார்ட்னர் என்பது கேபிஎம்ஜி நிறுவனத்தில் மூத்த ஊழியர்களை குறிக்கும் சொல்.
இதுக்குறித்து KPMG நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "எங்கள் குழுவின் அளவு, வடிவம் மற்றும் திறன்களை ஆடிட் தளத்தின் சக்திக்கு ஏற்றவாறு மாற்றி, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கவும், மூலதன சந்தைகளைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் பார்ட்னர்களுக்கு நிதி இழப்பீடு மற்றும் வேலை வாய்ப்பு உதவி வழங்கப்படும்.
பல ஆண்டுகளாக மூத்த பார்ட்னர்களை முன்கூட்டியே ஓய்வு பெற ஊக்குவித்து வந்த நிறுவனத்தின் திட்டம் போதுமான வெளியேற்றங்களை ஏற்படுத்தவில்லை. தற்போது அமெரிக்க ஆடிட் பிரிவில் சுமார் 1,400 பார்ட்னர்கள் மற்றும் மேலாண்மை இயக்குநர்களை கொண்டு இயங்கி வருகின்றன.
பார்ட்னர் குறைப்பு இருந்தாலும் கேபிஎம்ஜியின் அமெரிக்க ஆடிட் வியாபாரம் வளர்ச்சி பாதையில் தொடர்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை ஆணையத்தில் (எஸ்இசி) பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் சுமார் 10 சதவீதத்தை கேபிஎம்ஜி தணிக்கை செய்கிறது. இருப்பினும் டெலாய்ட், ஏர்ன்ஸ்ட் அண்ட் யங், பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் போன்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது இது குறைவான பங்குதான்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications