கும்பகோணம்- தஞ்சை ரயில் மயிலாடுதுறை வரை நீட்டிப்பு: டி.ஆர்.பாலு தகவல்
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: கும்பகோணம்-தஞ்சை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவரும்,
திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

கும்பகோணம்-தஞ்சை இடையேயான பயணிகள் ரயில் செப்டம்பர் 23ம் தேதி முதல் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் வரை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு கும்பகோணத்துக்கு 8 மணிக்கும் தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு 9.15க்கும் வந்து சேரும்.
இதே போன்று மறுமார்க்கத்தில் தஞ்சையில் இருந்து மாலை 6.05 மணிக்குப் புறப்பட்டு, கும்பகோணத்துக்கு இரவு 7.15 மணிக்கும், மயிலாடுதுறைக்கு இரவு 8.25க்கும் வந்தடையும் என்று முன்னாள் மத்திய அமைசச்ர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications