ஈரான் போருக்கு நடுவில் குத்தாட்டம் போடும் மல்டிபேக்கர் பங்கு! 3 வருடத்தில் 1164% லாபம், 4:1 போனஸ் பங்கு
ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியில் பங்குச்சந்தை பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், பெரும்பாலான பங்குகள் சரியும் காரணத்தால் முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்களுடைய முதலீட்டு மதிப்பை இழந்து நஷ்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால் ஒரு சில நிறுவனங்கள் போர்க்கு நடுவிலும் லாபத்தை பெற்று மல்டிபேக்கர் பங்குகளாக மாறி வருகிறது. அப்படிப்பட்ட பங்கு தான் இந்த Gyftr.
திங்கள்கிழமை பங்குச் சந்தை வர்த்தகத்தில் 7.24 சதவீதம் உயர்ந்த Gyftr பங்கு, இன்றைய வர்த்தகத்தில் ரூ.170-ல் தொடங்கிய, வர்த்தக முடிவில் ரூ.185.85-ல் நிலைபெற்றது. இன்று ஒரு நாள் மட்டும் 5.54 சதவீத உயர்வாகும். இதேவேளையில் சென்செக்ஸ் 702 புள்ளிகள் சரிந்தது.

அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் தோல்வியடைந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் ஹார்முஸ் நீரிணைக்கு அமெரிக்க கடற்படை கொண்டு முடக்கியுள்ள நிலையில் ஈரானின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது மிக முக்கியமான கேள்வியாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையிலும் Gyftr மல்டிபேகர் பங்காக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
பெயர் மாற்றம்
பங்குச் சந்தைக்கு அளித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இந்நிறுவனம் தனது பெயரை எல்கேபி ஃபைனான்ஸ் என்பதில் இருந்து ஜிஃப்டர் லிமிடெட் (Gyftr) என மாற்றியுள்ளதாக ஏப்ரல் 7 அன்று தெரிவித்தது. இந்தப் பெயர் மாற்றம் நிறுவனத்தின் புதிய உத்தியையும், எதிர்கால வளர்ச்சித் திட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் முதலீட்டாளர்கள் பார்க்கின்றனர். 2002-ம் ஆண்டு ரூ.1.50 விலையில் பட்டியலிடப்பட்ட இந்தப் பங்கு, தற்போது ரூ.185.85-க்கு உயர்ந்துள்ளது. இது அனைத்து கால உயர்வாக 17,108.33 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
4:1 விகிதத்தில் போனஸ் பங்குகள்
மார்ச் மாதத்தில் நிறுவனம் 4:1 விகிதத்தில் போனஸ் பங்குகளை அறிவித்தது. மார்ச் 9, 2026-ஐ ஒதுக்கீடு தேதியாகக் கொண்டு, நிறுவனத்தின் இயக்குநர் குழு 6,14,46,600 போனஸ் பங்குகளை ரூ.10 முகமதிப்புள்ள பங்குகளை வழங்கியது. இதன்படி, தற்போதுள்ள ஒரு பங்குக்கும் நான்கு புதிய பங்குகள் இலவசமாக வழங்கப்பட்டன.
டிசம்பர் 2025 காலாண்டு முடிவுகள்
மார்ச் காலாண்டு முடிவுகள் இன்னும் வெளியிடாத நிலையில், டிசம்பர் 31 உடன் முந்த காலாண்டில் ஜிஃப்டர் நிறுவனம் ரூ.5.9 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ரூ.11.4 கோடி நிகர நஷ்டத்தில் இருந்தது தற்போது லாபத்திற்கு மாறியுள்ளது. இதே காலாண்டில் செயல்பாட்டு வருமானம் ரூ.90.4 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இது ரூ.14.4 கோடி நஷ்டமாக இருந்தது.
மல்டிபேக்கர் வருமானம்
கடந்த ஒரு வாரத்தில் Gyftr பங்கு விலை 19.11 சதவீதமும், ஒரு மாதத்தில் 10.36 சதவீதமும் உயர்ந்துள்ளது. ஆறு மாதங்களில் 53 சதவீதமும், ஒரு ஆண்டில் 154.66 சதவீதமும் லாபம் தந்துள்ளது. மூன்று ஆண்டுகளில் 1161 சதவீதமும், ஐந்து ஆண்டுகளில் 1247 சதவீதமும் உயர்ந்து முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பை அதிகரித்துள்ளது.
வார்னிங்
இருப்பினும், BSE மற்றும் NSE பங்குச் சந்தைகள் இந்தப் பங்குக்கு இரண்டு முக்கிய எச்சரிக்கைகளை வழங்கியுள்ளன. முந்தைய நான்கு காலாண்டுகளின் அடிப்படையில் EPS (ஒரு பங்குக்கு லாபம்) பூஜ்ஜியமாக உள்ளது என மும்பை பங்குச்சந்தை அறிவித்துள்ளது. இது கடந்த 12 மாதங்களில் நிறுவனம் லாபம் அல்லது நஷ்டம் இல்லாத நிலையில் இருப்பதைக் காட்டுகிறது.
மேலும், ASM Stage 1 (Additional Surveillance Measure) எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது. இது பங்கு விலை அல்லது அளவு ஏற்ற இறக்கம் அதிகமாக இருப்பதை சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (SEBI) மற்றும் பங்குச் சந்தைகள் கண்காணித்து வருவதாகும் அறிவித்துள்ளது.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகளில் அடிக்கடி காணப்படும் இந்த எச்சரிக்கை, உயர் ஆபத்தை சுட்டிக்காட்டுகிறது. இதனால் Gyftr பங்குகளில் லாபம் வருகிறது என்பதற்காக பணத்தை முதலீடு செய்யக்கூடாது என்பதை உணர்த்துகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Tamil.oneindia.com அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
-
வரலாற்றிலேயே முதல் முறையாக.. LIC மாபெரும் அறிவுப்பு.. 1:1 போனஸ்.. 22 லட்சம் பேர் கொண்டாட்டம்! -
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை ரத்தகளறி! தங்கம் - பங்குகள் வீழ்ச்சி, எண்ணெய் உயர்வு? -
அலர்ட்..! சென்செக்ஸ், நிஃப்டி பெரும் சரிவு.. வந்தது முக்கிய சிக்னல்! -
சென்செக்ஸ் 1600 புள்ளிகள் சரிவு.. ஆடிப்போன பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. இது வெறும் டிரைலர் தான்! -
இந்தியாவுக்கு வந்த கேட்ச்-22 சிக்கல்.. இனி அடுத்தடுத்து பிரச்சனை தான்? -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
ரூ.2 லட்சத்தை தாண்டும் தங்கம்.. நிலைமை கைமீறும்? 'கோல்ட் குரு' சாந்தகுமார் உடைக்கும் ரகசியங்கள்! -
தங்கம் விலையில் இன்று பூகம்பம்.. அமெரிக்கா பகீர்.. ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால்.. எல்லாம் மாறுது -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி















Click it and Unblock the Notifications