பங்குசந்தையில் தொடர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

மும்பை பங்குசந்தையில் காலையில் இருந்து தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது.

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை பங்குசந்தையில் காலையில் இருந்து தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அதேபோல் சர்வதேச அளவிலும் பல நாடுகளின் பண மதிப்பு சரிந்து வருகிறது. இதனால் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக மும்பை பங்கு சந்தையிலும் கடந்த வாரம் சரிவு ஏற்பட்டது.

Mumbai Share Market faces a huge down after last Friday loss

முக்கியமாக கடந்த வெள்ளி கிழமை திடீர் என்று ஆயிரம் புள்ளிகள் சந்தையில் சரிவு ஏற்பட்டது. இதனால் அதிக அளவில் முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை பங்கு சந்தை ஏற்றத்துடன்தான் தொடங்கியது. பிஎஸ்இ சென்செக்ஸ் 36,924.72 புள்ளிகளுடனும், நிஃப்டி 11,164.40 புள்ளிகளுடனும் தொடங்கியது. ஆனால் சில நிமிடத்தில் இதில் சரிவு ஏற்பட்டது. அதன்பின் தொடர்ந்து இந்த நிறுவனங்கள் சரிவை சந்தித்தது,

தற்போது சென்செக்ஸ் 510 புள்ளிகள் சரிவை சந்தித்து 36141.45 புள்ளியில் உள்ளது. நிஃப்டி 170 புள்ளிகள் சரிவை சந்தித்து தற்போது 10994 புள்ளியில் உள்ளது. காலையிலேயே ஏற்பட்ட இந்த சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெள்ளிக்கிழமை சரிவு காரணமாக வங்கி சாராத நிறுவனங்களை உன்னிப்பாக கவனிக்க போவதாக கூறினார். ஆனாலும் தற்போது சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது,

முக்கியமாக, மாருதி சுசுகி, பார்தி ஏர்டெல், மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, டாட்டா ஆகியவை அதிக இழப்பை சந்தித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+