நம்ம உணவகத்தில் ஏன் சாப்பிடணும்?: அங்கு அப்படி என்ன ஸ்பெஷல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2017-ம் வருடம் ஆகஸ்டு 4ம் தேதி திரு. ரஹமத்துல்லாகாசிம் ஆகிய நான் சென்னை 600026 வடபழனி, ஆற்காடு சாலையில் நம்ம உணவகம் என்னும் நிறுவனத்தை துவங்கி உள்ளேன். இதற்கான தலைமை நவீன சமையல் கூடம், எண் 37, ஆற்காடு சாலை, வடபழனி, சென்னையில் சுமார் 8500 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.

சைவம் மற்றும் அசைவம் என தனித்தனி பிரிவுகளுக்கென்று, முறையாக, அனுபவம் மிக்க பொறியாளரை கொண்டு வடிவமைத்து, அவர்களின் மேற்பார்வையில், புதிய வடிவில் மேற்கூரையும், சிறப்பு கட்டிட பணியாளர்களை கொண்டும் சிறப்பான முறையிலும், பாதுகாப்பான முறையிலும், மூன்று வாயில்களில் அமைத்து கட்டிடம் நிறுவி உள்ளேன்.

Namma Unavagam takes cares of your taste buds and health

நவீனசமையற்கூடத்தின் சிறப்பம்சம்:

தினமும் சுமார் 15,000 முதல் 20,000 நபர்களுக்கு உணவு தயாரிக்கும் திறன் கொண்டது. தினமும் காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் இரவு சிற்றுண்டி என உணவு வகைகள் சமைக்கப்படும்.

சைவம் மற்றும் அசைவம் சமைக்க இரு பகுதிகளும் தனிதனியாக அமைக்கப்பட்டுள்ளது. தூய்மையான சமையல் செய்வதற்கு ஏதுவாக (கோட்டாக்கல்) தரை அமைக்கப்பட்டுள்ளது. தூய்மையான சமையல் செய்வதற்கு ஏதுவாக (கோட்டாக்கல்) தரை அமைக்கப்பட்டுள்ளது.

http://www.nammaunavagam.com/

contact: +91- 7449001234

சுவர்கள் தூய்மையாக இருக்கவும், சமையல் செய்யும் பகுதியில் எண்ணெய் கறை இல்லாமல் இருக்க டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. பாத்திரங்களை நீரில் சுத்தம் செய்ய தனிபகுதி அமைக்கப்பட்டுள்ளது. அன்றாட சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள் வைக்க தனி அறை அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து பொருட்கள் இறக்கவும், ஏற்றவும் அகலமான நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. அரவை (கிரைண்டர்) பகுதி தனியாக அமைக்கப்பட்டுள்ளது. தோசைக்கல் பகுதி தனியாக உள்ளது. சமையல் செய்ய, எரிவாயு அடுப்பு பகுதி தனியாக (மின்சார இணைப்புடன்) அமைக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் சுத்தம் செய்து, துண்டுகள் செய்ய தனிப்பகுதியில் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் காம்பி ஓவன்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இட்லி, அரிசி சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள், ஆட்டுக்கறி, நாட்டுக்கோழி என்று மொத்தமாகவும், தனித்தனியாகவும் ஒரு முறைக்கு 50 கிலோ வரை - சுமார் 25 முதல் 35 நிமிடத்தில் வேக வைக்கும் திறன் கொண்ட இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

Namma Unavagam takes cares of your taste buds and health

குறைந்த நிமிடங்களில் குழம்பு, சாம்பார் மற்றும் கூட்டு பொரியல் செய்திட ஒரே நேரத்தில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட Cook Wok இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. சப்பாத்தி மற்றும் கோதுமை பரோட்டா விரைவாக தயாரிக்க தனிப்பகுதியில் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

பாரம்பரிய முறையில் பிரியாணி செய்ய செப்பினால் ஆனபாத்திரங்கள் நாங்களாகவே செப்புத்தகடு கொள்முதல் செய்து முறையாக பட்டறையில் பாத்திரமாக செய்யப்பட்டு சுத்தமான வெள்ளீயம் முலாம் பூசப்பட்டு தரமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆட்டுக்கறி, நாட்டுக் கோழிகறி, மற்றும் மீன், இறால் ஆகியவைகள் சுத்தம் செய்ய தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. பிரியாணி வகைகள் விறகு அடுப்பில் சமையல் செய்யுமிடத்தில் மாசுபடாத அளவிற்கு சமையல் செய்ய மாசு வெளியேற்றும் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

எங்கள் சமையல் கூடத்தில் தயாரிக்கப்படும் உணவு வகைகள் அனைத்தும், எந்தவொருகலப்படமும் இல்லாத அளவில் மளிகை மூலப்பொருட்கள், குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கறிகள் அனைத்தும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்தே நேரடி கொள்முதல் செய்யப்படுகின்றன.

ஆட்டுக்கறி தேவைக்காக வெள்ளாட்டுப் பண்ணைகளில் இருந்து நேரடி தரம் பார்த்து கொள்முதல் செய்யப்படுகிறது. நாட்டுக்கோழி பண்ணைகளை தேர்ந்தெடுத்து நேரடி கொள்முதல் செய்து புதிய பண்ணைகளை உருவாக்கி அதன் மூலம் நல்ல தரமான கோழிகளை கொள்முதல் மூலம் உணவு தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Namma Unavagam takes cares of your taste buds and health

ஆரோக்கியமான உடல் நலத்திற்கு ஏற்ற தரமான நாட்டு மர செக்கினால் தயாரிக்கப்படும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய் (எள்ளு) தேங்காய் எண்ணெய், Borges போர்சீஸ் டிலைட் ஆலிவ் எண்ணெய் உற்பத்தியாளரிடமிருந்து நேரடி கொள்முதல் செய்து உணவு வகைகள் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் நல்ல முறையில் பயிர் செய்து உற்பத்தி செய்யும் பல நகர, கிராமங்களின் விவசாயிகளிடம் இருந்து அரிசி பருப்பு வகைகள் நேரடி கொள்முதல் செய்யப்படுகிறது.

வட மாநிலத்தில் இருந்து கோதுமை, பாஸ்மதி அரிசி உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்யப்படுகிறது. கடல் மீன்கள் தரம் பரிசோதித்து மொத்த விற்பனையாளர்கள் இடத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. அசைவ ஆட்டுக்கறி, நாட்டுக்கோழிக்கறி, மீன் வகைகள் சுத்தம் செய்து முறையாக குளிர்சாதன அறையில் பதப்படுத்த மிகப்பெரிய அளவில் தனித்தனியாக குளிர்சாதன அறை உருவாக்கப்பட்டுள்ளது.

சமையல் செய்ய சுத்தமான, சுகாதாரமான தண்ணீருக்காக சுத்திகரிக்கப்பட்ட நீர் வடிகட்டும் கருவி (R.O) பொருத்தப்பட்டு உள்ளது. தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் அனைத்தும் எடை அளவு செய்யப்பட்டு முறையாக வெளியில் செல்ல சக்கரவண்டிகள் உள்ளன.

சமையல் செய்ய அடுப்பு பகுதிகளுக்கு செல்லும் எரிவாயு பைப்லைன்கள் அனைத்தும் தரமானதாகவும், பாதுகாப்பாகவும் பொருத்தப்பட்டுள்ளது. சமையல் கூடம் முழுவதும் தேவையான அளவுக்கு தரமான தண்ணீர் குழாய்களும் பொருத்தப்பட்டுள்ளது.

Namma Unavagam takes cares of your taste buds and health

அதே போன்று மின்சார சாதனங்கள் பயன்படுத்த மின்சார பொருத்திகள் தரமானதாக பொருத்தப்பட்டுள்ளது. தேவையான அளவுக்கு மின் விளக்குகள் (இரவை பகலாக்கும்) பொருத்தப்பட்டு உள்ளது.

சமையல் கூடத்தில் அசுத்த காற்று வெளியேற, சுத்தமான காற்று உள்ளே வரும் வண்ணம் தகுந்த (Eexhaust Fan) மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான அளவு மின்சாரம் இணைப்பு பெறப்பட்டுள்ளது. கழிவு நீர் வெளியேற சரியான ஃபில்டர்கள் (வடிகட்டிகள்) வைக்கப்பட்டுள்ளது.

25,000 லிட்டர் கொள்ளளவு தண்ணீர் தொட்டி சிறப்பான கான்கிரீட் முறையில் கட்டப்பட்டு டைல்ஸ் பதிக்கப்பட்டு வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய தகுந்தவாறு கட்டப்பட்டுள்ளது. பணியாளர்கள் அமர்ந்து உணவருந்த தனி உணவறை கட்டப்பட்டுள்ளது. பணியாளர்கள் சீருடை மாற்ற ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக அறைகள் கட்டப்பட்டுள்ளது. அதேபோன்று தனித்தனியே கழிவறையும் கட்டப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Namma Unavagam takes cares of your taste buds and health

பாதுகாப்பிற்கும், மற்ற செயல்களுக்கும் தகுதி பெற்ற அனுபவம் உள்ள பாதுகாவல் அதிகாரி மற்றும் பாதுகாவலர்களை வைத்து அனைத்து நேரங்களிலும் கண்காணிக்கப்படுகிறது. உணவுப் பொருட்களை பொட்டல முறையில் கொடுக்க அரசின் தரக்கட்டுப்பாடு அனுமதி உள்ள அளவில் பொட்டலபொருட்களை உற்பத்தியாளர்கள் இடத்தில் இருந்து நேரடிகொள்முதல்.

சமையற் கலைஞர்கள் அனைவரும் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய தமிழக பாரம்பரியம் உணவு வகைகளை செய்து அனுபவமுள்ள (காரைக்குடி, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர், திருச்சி ,நாகர்கோயில், சிவகங்கை ஊர்களில் இருந்து) கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களை பெருமைபடுத்தும் வகையில் நல்ல ஊதியம் கொடுக்கப்படுகிறது.

சமையற் கூடத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்த பிறகே பணிக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். நம்ம உணவக பணியாளர்களுக்கு மற்றும் விற்பனையாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு நடத்தப்படுகிறது. பணியாளர்கள் அனைவருக்கும், நல்ல உணவு, சீருடை, தங்கும் விடுதி வழங்கப்படுகிறது.

நிலத்தடி நீர் இறைக்க 2 ஆழ்துளை கிணறு போடப்பட்டுள்ளது. பூச்சிகள் உள்ளே நுழையா வண்ணம் எதிர்கொள்ளும் காற்றாடிகள் நுழைவு வாயில்களில் பொருத்தப்பட்டு உள்ளது. தினமும் சமையல் கூடத்திற்கு பூச்சிகொல்லி மருந்து தெளிக்கப்பட்டு சமையற்கூட பகுதி முழுவதும் பாதுகாக்கப்படுகிறது.

உணவு பாதுகாப்பு சான்று பெறப்பட்டு உள்ளது. உணவு கூடத்திற்கு தீ சான்று பெறப்பட்டுள்ளது மற்றும் மாநகராட்சி பதிவுசெய்து சான்று பெறப்பட்டுள்ளது. அனைத்து சமையல் உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் பணியாளர்களுக்கும், சமையல் கலைஞர்களுக்கும், காப்பீடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பசும்பாலை கொண்டு தயிர் மற்றும் நெய் உற்பத்தி செய்ய, நேரடி கொள்முதல் செய்து நம்ம உணவகம் வாகனத்தின் மூலம் கொண்டு வரப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. எங்கள் உணவு வகைகள் அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் வகையில் மிகக்குறைந்த விலையில் விற்கப்பட உள்ளது. மேலும், சுத்தமான, சுகாதாரமான, ஆரோக்கியமான முறையில் தயாரித்து வழங்கப்பட உள்ளது.

எங்கள் உணவு வகைகளை கைபேசி செயலி (Mobile APP) மூலம் பதிவு செய்து மாதாந்திர, வாராந்திர, வருடாந்திர, மற்றும் வீட்டு விசேஷங்களுக்கு ஆர்டர் செய்ய வகை செய்யப்பட்டுள்ளது. 2017ம் வருடம் செப்டம்பர் 1 முதல், ஏழு மாதங்கள், 200 நாட்கள் உணவு செய்முறை சோதனை தகுந்த சமையல் கலைஞர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

Namma Unavagam takes cares of your taste buds and health

பணியாளர்கள் வருகைப் பதிவேடு கைவிரல் பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் சேவை மையம் என 15 தகுந்த பணியாளர்களை கொண்டு ஆர்டர்கள் பதிவு செய்யவும் வாடிக்கையாளரின் நிறை குறைகளையும் பதிவு செய்ய வகைசெய்யப்பட்டுள்ளது.

நிறுவன தயாரிப்புகளை விற்பனை செய்யவும் நிறுவனம் குறிக்கோள் கொள்ளும் விழிப்புணர்வோடு கொண்டு செல்ல திரைதுறையினரை கொண்டு விளம்பரபடம் எடுக்கும் திறமையான இயக்குநர்களை கொண்டு நல்ல விளம்பரபடம் எடுத்து, தொலைக்காட்சி, வானொலி, திரையரங்குகள் மூலம் விளம்பரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாங்களே உணவு பரிசோதிக்கும் ஆய்வுக்கூடம் நிறுவ உள்ளோம். சமையல் மளிகை பொருட்கள் சமையற்கூடத்தின் மிக அருகில் தனியாக சுமார் 3500 சதுர அடியில் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள், விற்பனையாளர்கள், சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் (Acheivements Award) கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உணவு தயாரிப்பின் நோக்கம்:

1. நல்ல, சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட தரமான உணவு.

2. சுத்தமான தரமான நாட்டுச்செக்கு எண்ணெய் வகைகள்/ஆலிவ் எண்ணெய் உபயோகித்தல்.

3. மலிவான விலையில் சுவையான உணவு கொடுத்தல்.

4. தினம் ஒரு சிறப்பு வகை உணவு.

5. இயற்கையான காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் உணவு.

6. செப்பு பாத்திரம் (வெள்ளீயம் முலாம்) பூசப்பட்ட பாத்திரங்களில் செய்த அசைவ உணவு வகைகள்.

7. மசாலா பொருட்கள் சொந்த தயாரிப்பு

8. அனுபவம் வாய்ந்த தென்தமிழகத்தின் பாரம்பரிய உணவு தயாரிக்கும் சமையல் வல்லுநர்களைக் கொண்டு சமைத்தல்.

9. அனைத்து இடங்களிலும் ஒரே சுவை.

10. தூய்மையான சுத்திகரிக்கப்பட்ட நீர் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

11. கலப்படமில்லாத உணவு

12, கலர் பொடி இல்லாத உணவு

13. இரசாயன எஸன்ஸ் இல்லாத உணவு

14. அஜினமோட்டோ இல்லாத உணவு

15. மைதா இல்லாத உணவு

16. வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில், தகுந்த, தரமான, உணவு (நம்ம உணவு)

Namma Unavagam takes cares of your taste buds and health

எங்கள் நிறுவனத்தால் பயனைடைவோர் :

எங்கள் அலுவலகம், மற்றும் சமையற்கூடம், வாகன ஓட்டுநர்கள், வாகன பராமரிப்பாளர்கள், சமையல் செய்பவர்கள், உதவிசமையல் கூடபணியாளர்கள், விற்பனைகூட விற்பனையாளர்கள் என்று ஏனைய 500 குடும்பங்கள் மூலம் 1500 பேர் பயனடைவார்கள். நாங்கள் தயாரிக்கும் உணவை விற்பனை செய்யும் விற்பனை ஏஜென்சிகள் நல்ல பயனை அடைவார்கள். குறைந்த முதலீட்டில் கடின உழைப்பில்லாமல் முறையான இலாபம் பெறுவார்கள்.

எங்கள் நிறுவனத்தில், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், போன்றோருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களும், அவர்களை சார்ந்தவர்கள் வாழ்வாதாரம் காக்கப்படுகிறது. சமையல் கலை வல்லுனர்களுக்கும், மற்ற பணியாளர்கள் தங்கி பணிபுரிய அனைவருக்கும் தங்கும் வசதி சிறப்பாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

Namma Unavagam takes cares of your taste buds and health

பணியாளர்கள் அனைவருக்கும் பணி நேரத்தின் போதும், தங்கி பணிபுரிவர்களுக்கும் பணி முடிந்தபோதும், தினமும் மூன்று வேளை உணவு அளிக்கப்படுகிறது. விவசாயிகள், கோதுமை ,பாஸ்மதி உற்பத்தியாளர்கள். மளிகை பொருட்கள் உற்பத்தியாளர்கள். எரிவாயு, விறகு, மரக்கட்டை சப்ளையர். ஆடு, நாட்டுக்கோழி பண்ணையாளர்கள். மீன் விற்பனையாளர்கள். பொட்டல உற்பத்தியாளர்கள். தண்ணீர் சப்ளையர்கள். அரசு கழிவுநீர் இறைக்க/ வெளியேற்ற மாத கட்டண முறை. தினமும் குப்பை வெளியேற்ற மக்கும் குப்பை மக்காத குப்பை, அரசுக்கு மாதகட்டணம். பால் உற்பத்தியாளர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகள் முறையாக செலுத்தப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+