ரிலையன்ஸ் அனில் அம்பானிக்கு அடுத்த செக்.. நெருக்கமான 2 விஐபிக்கள் அமலாக்கத்துறையால் அதிரடி கைது
மும்பை: தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏடிஏஜி குழுமத்திற்கு மீண்டும் ஒரு பேரிடி இறங்கியிருக்கிறது. ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களான சதீஷ் சேத் மற்றும் கௌதம் தோஷி ஆகிய இரு முக்கியப் புள்ளிகளை அமலாக்கத்துறை மும்பையில் அதிரடியாகக் கைது செய்துள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இவர்களை, டெல்லியில் பதிவாகியுள்ள வழக்கு விசாரணைக்காக டிரான்சிட் ரிமாண்ட் எடுத்து டெல்லிக்குத் தூக்கியுள்ளது அமலாக்கத்துறை. இந்த விவகாரத்தின் பின்னணியில் இருப்பது வங்கிக் கூட்டமைப்பை ஏமாற்றிய ஒரு பகீர் கதை. அது எப்படி வெளிச்சத்திற்கு வந்தது தெரியுமா? பார்ப்போம்.
ஒரு நிறுவனத்திற்காக வாங்கிய கடனை, அந்தத் தொழிலில் முதலீடு செய்யாமல், நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்த தனது மற்றுமொரு நிறுவனத்தின் கடனை அடைக்க அனில் அம்பானி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்தத் தவறான நிதி மேலாண்மைதான், இன்று அவரது நிறுவனங்களின் முன்னாள் இயக்குநர்களை ஜெயிலுக்கு அனுப்பும் அளவிற்கு நிலைமையைக் மோசமாக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுபற்றி பார்ப்போம்.

வழக்கின் தொடக்கம்
ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் தொழில் விரிவாக்கத்திற்காக, பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான 11 வங்கிகள் அடங்கிய கூட்டமைப்பிடம் இருந்து மொத்தம் 735 கோடி ரூபாய் டெர்ம் லோன் வாங்கியிருந்தது.
எஸ்பிஐ வங்கி கொடுத்த அதிரடி புகார்
வாங்கிய கடனில், எஸ்பிஐ வங்கிக்கு மட்டும் தர வேண்டிய 114.98 கோடி ரூபாய் கடனில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதை அந்த வங்கி கண்டுபிடித்தது. வாங்கிய பணம் குறிப்பிட்ட திட்டத்திற்குப் பயன்படுத்தப்படாமல், முறைகேடாகத் திருப்பிவிடப்பட்டது அல்காரிதம்களாலும் தணிக்கையினாலும் அம்பலமானது.
சிபிஐ என்ட்ரி மற்றும் ரெய்டு
எஸ்பிஐ கொடுத்த புகாரின் பேரில், கடந்த மார்ச் மாதம் சிபிஐ இந்த இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, இவர்களது அலுவலகம் மற்றும் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்தியது. சிபிஐ வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதை உறுதி செய்த அமலாக்கத்துறை , இப்போது களமிறங்கி இருவரையும் தூக்கியுள்ளது.
இனி அனில் அம்பானிக்கு வரப்போகும் புது சிக்கல்கள் என்ன?
இந்த இருவரின் கைது என்பது வெறும் ஆரம்பம்தான். இதன் நிழல் நேரடியாக அனில் அம்பானியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் சேத், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் துணைத் தலைவராகவும் இருந்தவர். கௌதம் தோஷியும் அனில் அம்பானியின் நிழல் போலச் செயல்பட்டவர். இவர்களிடம் டெல்லியில் வைத்து நடத்தப்படும் கிடுக்கிப்பிடி விசாரணையில், "யார் சொல்லிக் கடனைத் திருப்பிவிட்டீர்கள்?" என்ற கேள்விக்கு வரும் பதில்கள் அனில் அம்பானிக்கு நேரடியாகக் கண்ணிவெடியாக மாற வாய்ப்பு உள்ளது.
அடுத்தடுத்து பாயும் சம்மன்கள்
ஏற்கனவே நிதி முறைகேடு வழக்குகளில் அமலாக்கத்துறை முன்னிலையில் அனில் அம்பானி ஆஜராகியுள்ளார். இப்போது, 11 வங்கிகள் கூட்டமைப்பில் நடந்த இந்த 735 கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில், குழுமத்தின் தலைவரான அனில் அம்பானிக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர அதிக வாய்ப்புகள் உள்ளன.
கார்ப்பரேட் இமேஜுக்குப் பெரும் முட்டுக்கட்டை
அனில் அம்பானி தனது நிறுவனங்களை மீண்டும் தூக்கி நிறுத்தப் போராடி வரும் வேளையில், அவரது வலது கை, இடது கையாக இருந்த மாஜி இயக்குநர்கள் இருவர் டெல்லி போலீஸ் காவலுக்குச் சென்றிருப்பது, அவரது எஞ்சியிருக்கும் கார்ப்பரேட் கிரெடிட் ரேட்டிங்கையும், ரிலையன்ஸ் பங்குகளையும் சந்தையில் கடுமையான சரிவை நோக்கித் தள்ளும் என்றே பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
11 வங்கிகளை வளைத்து வாங்கிய கடனில், எஸ்பிஐ கொடுத்த புகார்தான் இந்த இரு முக்கிய அதிகாரிகள் சிக்கியுள்ளனர். இவர்கள் கொடுக்கும் வாக்குமூலம், ரிலையன்ஸ் அனில் அம்பானியின் சிம்மாசனத்தையே உலுக்கப் போகிறது என்பது நிச்சயம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி














Click it and Unblock the Notifications