பெருமழையால் கேரளாவில் சாலைகள் பாதிப்பு - தமிழக சரக்கு வாகனங்களுக்குத் தடை
தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் சரக்கு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்கு அம்மாநிலத்தின் சில பகுதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி : கேரளாவில் பெய்து வரும் தொடர்மழையால் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சரக்கு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்கு நெல்லை மாவட்டம் கோட்டைவாசல் ஆரியங்காவு வனப்பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தினால் கேரளா மாநில சாலைகள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன. கடினமான வளைவுகள் மற்றும் மிக உயரமான மலைப்பாதைகளில் ஆயிரக்கணக்கில் கனரக வாகனங்கள் செல்வதால் நெல்லை மாவட்டம் கோட்டைவாசல் ஆரியங்காவு வனப்பகுதியில் அடிக்கடி சாலைகள் பழுது அடைவதாகத் தகவல் வெளியானது.

தற்போது தென்மேற்குப் பருவ மழை பெய்து வருவதால் கல்லடா ஆற்றில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தச் சாலையில், பாதுகாப்பு நலன் கருதி கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்படுவதாகக் கொல்லம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மிகவும் கடினமான வளைவுகள் மற்றும் அதல பாதாளம் மிக்க மலைப்பாதை ஆயிரக்கணக்கில் கனரக வாகனங்கள் செல்வதால் இந்த தடத்தில் அடிக்கடி சாலைகள் பழுது அடைகின்றன. மேலும் தற்போது தென்மேற்குப் பருவ மழை பெய்து வருவதால் கல்லடா ஆற்றில் மண்சரிவு உருவாகியுள்ளது.

இதனால், தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்குள் செல்லும் வாகனங்கள் புளியரை காவல் துறையினராலும், சோதனைச் சாவடியிலும் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த திடீர் தடையால் வாகன ஓட்டுனர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications